கலைஞர்...?
Posted by
வானம்பாடி
at
Wednesday, March 31, 2010
31 March, 2010
Labels:
விமர்சனம்
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக வந்து உங்களை காப்பாற்றுவேன் என்று சொல்லும் இவரால் தமிழக மீனவர்களையும் ஈழத்தமிழர்களையும் காப்பாற்றமுடியவில்லை, கேட்டால் அது அண்டை நாட்டு பிரச்சினை என்றும் டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கதை விடுவார், ஆனால் இவருடைய வாரிசுகளுக்கு டெல்லி அரசியலில் பதவி இல்லையென்றால் உடனெ உண்ணாவிரதம் இருப்பார் இல்லையென்றால் ஆட்சிக்கு ஆதரவு தருவதை நிறுத்தப்போவதாக மிரட்டுவார்.
தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் டெல்லிக்கு கடிதம் எழுதுவார், இவர் கடிதம் எழுதிய சாதனையை ‘கின்னஸ்' சாதனையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வார ஏடுகள் கூட அடிக்கடி கேலிச் சித்திரம் வரையும் அளவிற்கு அவரது கடித சாதனை ஏற்கப்பட்டுள்ளது. கருணாநிதி அவர்களது இந்தத் துரோக நாடகத்தைக் கண்டு வெகுண்டெழுந்த முத்துக்குமார் தன்னைத் தீயிற்கு இரையாக்கித் தமிழகத்தைப் போர்க் கோலம் பூணச் செய்தார்.வன்னி மீதான சிங்களப் படைகளின் தாக்குதல் உச்சம் பெற்று, தமிழீழ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது தமிழகத்தில் எழுந்த உணர்ச்சி அலைகளை உச்ச நிலையை அடைந்த வேளையில், சோனியா காந்தி அம்மையாரின் நரபலி வேட்டை தடைபட்டு விடக் கூடாது, அவர் தரும் வரம் இடை நின்று போகக்கூடாது என்ற கடமை உணர்வோடு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆடிய நாடகமும், எழுதிய கடிதங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
தன் குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனெ உண்ணாவிரதம் இருப்பார் இல்லையென்றால் இல்லையென்றால் ஆட்சிக்கு ஆதரவு தருவதை நிறுத்தப்போவதாக மிரட்டுவார். அதுவும் இல்லையென்றால் உடனே டெல்லிக்கு விமானம் ஏறுவார்,
தன் குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனெ உண்ணாவிரதம் இருக்க தெரிந்த இவருக்கு தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உண்ணாவிரதம் இருக்க தெரியாதா, தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருந்தால் இவருக்கு பணம் அல்லது பதவியா தரப்போகிறார்கள் ?
மொத்தத்தில் தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக வந்து உங்களை காப்பாற்றுவேன் என்று சொல்லும் இவர் ஒரு தமிழின துரோகி !
No response to “கலைஞர்...?”
Post a Comment