போஃபர்ஸ் ? 24 கோடியிலிருந்து 250 கோடியாக..?








ராஜிவ்கந்தியின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்த பெருமை போஃபர்ஸ் பீரங்கிக்கு உண்டு. இடைத்தரகர்கள் மூலம் ராணுவத்திற்க்கு ஆயுதம் வாங்கககூடாது, என்கின்ற புதிய ராணுவச்சட்டத்தை உருவாக்கி அந்த சட்டத்தை அவரே மீறீனார்.
தன்னுடைய நண்பர் ஸ்வீடன் பிரதமர் பால்மே கேட்டுகொண்டதால் ஸ்வீடனில் இருந்து 1400 கோடியில் 400 போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் போட்டார்,
ஆனால் போஃபர்ஸ் பீரங்கிகள் தரம் குறைந்தவை என்று ராணுவ அதிகாரிகள் சொன்னதையும் மீறி இந்த ஒப்பந்தம் போடப்பட்டது, 1987 ஏப்ரல் 16-ம் தேதி ஸ்வீடன் நாட்டு வானொலி போஃபர்ஸ் பீரங்கி ஊழல் பற்றிய தகவலை முதன் முதலில் வெளியிட்டது. ஸ்வீடனில் இருந்து போஃபர்ஸ் பீரங்கிகள் வாங்குவதற்காக இந்தியாவில் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஸ்விஸ் வங்கி மூலம் 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதுதான் ஸ்வீடன் நாட்டு வானொலி வெளியிட்ட செய்தியின் சாரம்சமாகும். எதிர்க்கட்சிகள் பொங்கியெழுந்து போராட்டத்தில் இறங்கியது. போஃபர்ஸ் பீரங்கி ஊழலை சொல்லியே வி.பி.சிங் பிரதமர் ஆனார் ,
ராஜிவ்கந்தி, போஃபர்ஸ் நிறுவன அதிகாரிகள், உயர்மட்ட அதிகாரிகள், இடைதரகர் குவாத்ரோச்சி, என பலர் மேல் சி.பி.ஜ வழக்கு பதிவு செய்தது . வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் குவாத்ரோச்சியை தவிர மற்ற அனைவருமே இறந்து விட்டார்கள். இந்தியாவை தவிர உலகின் மற்ற எல்லா நாடுகளிலும் சுற்றிய குவாத்ரோச்சியை சி.பி.ஜ அதிகாரிகளால் கண்டு பிடிக்க முடியவில்லை.
போஃபர்ஸ் பீரங்கி ஊழலில் குவாத்ரோச்சி மேல் குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்துவிடலாம் என்று சி.பி.ஜ கோர்ட்டில் இப்போது மனுத்தாக்கல் செய்த்துள்ளது. 64 கோடி ரூபாய் லஞ்ச ஊழலை விசாரிக்க இந்த 24 வருடங்களில் சி.பி.ஜ செலவழித்திருக்கும் தொகை மட்டும் 250 கோடி ரூபாய்.
ஆனால் தி.மு.க வின் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அ.ராஜா ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மூலமாக செய்த ஊழலோ 60 ஆயிரம் கோடி ரூபாய்.


இதை யார் விசாரிப்பது ? இப்படியெல்லாம் ஊழல் மூலம் சம்பாரிப்பதால் தான் தேர்தலில் ஓட்டுக்கு ரூபாய் 500 முதல் 10000 வரை கொடுக்க முடிகிறது,