மொபைல் உலகில் இன்டர்நெட் பிரவுசர்கள்...



மொபைல் போன்களுக்கான இலவச இன்டர்நெட் பிரவுசர்கள்...



ம்ப்யூட்டரில் மட்டும்தான் இன்டர்நெட் பிரவுசர் இருக்குமா என்ன. செல்போன்களுக்கும் அதே போல் இன்டர்நெட் பிரவுசர்கள் இருக்கிறது.
இதை பயன்படுத்தி பார்க்கும் முயற்ச்சியில் என்னுடையா நோக்கியா N73 NOKIA 6270 மொபைல்களில் பயன்படுத்தி பார்த்தேன் கம்ப்யூட்டரில் பிரவுசிங் செய்யும் அதே அனுபவத்தை மொபைல் பிரவுசிங்கிலும் பெறலாம் . என்பதை அறிந்தென்..
வாருங்கள்
அது பற்றி ஒரு தொகுப்பு.
நீங்கள் ஜாவா போன்களை வைத்திருந்தீர்களானல் ஆபராமினி[opera mini] பிரவுசரை தேர்ந்தெடுக்கலாம் ஏனென்றால் ஜாவா ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்களுக்கு இதுதான் சிறப்பான முறையிலும் , அதிவேகத்தில்
பிரவுசிங்கில் ஈடுபடமுடிகிறது நல்லமுறையிலும் ஒத்துழைக்கிறது.
நீங்கள் இதை டவுன்லோடு செய்ய உங்களுடைய இன்டர்நெட் பிரவுசர் மூலமாகவே டவுன்லோடு செய்ய வேண்டும், ஏனென்றால் அப்போதுதான் உங்களுடைய மொபைல் அதற்க்கு தகுந்த தொகுப்பை தானகவே தேர்ந்தெடுக்கும், உங்களுடைய மொபைல் எதுவாக இருந்தாலும் அதனுடன் இணைந்தே வரும் பிரவுசர்களையே இது போன்ற முயற்ச்சிகளுக்கு பயன்படுத்துவது நல்லது,
ஏனென்றால் அப்போதுதான் அவை சிறப்பான செயல்பாட்டினை கொடுக்கும்,. இதன் யூசர் இன்டர்பேஸ் மிக சிறப்பாகவும் , பயன்படுத்த எளிதாகவும் உள்ளது.
இதில் உள்ள ஒரே குறை என்னவென்றால் நீங்கள் எந்த ஒரு பைலை அதாவது பாடல்கள், படங்கள்,வீடியோககள், விளையாட்டுக்கள் போன்ற பைல்களை டவுன்லொடு செய்யும்போது டவுன்லோடு இயக்கம் தானகவே மொபைல் பிரவுசருக்கு மாறிவிடும்.
அடுத்து ஏதாவது ஒரே ஒரு வெப்சைட் மட்டுமே பிரவுசிங் செய்ய முடியும்.
ஆனால் ஆபராமினி.5 பீட்டா' வில் இந்த குறைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

UCWEB பிரவுசரில் ஜாவா போன்களுக்கான தொகுப்பும் கிடைக்கிறது, ஆனால் வேகம் சற்று குறைவு.
இதை பயன்படுத்தியவர்களும் வேகம்
சற்று குறைவாக இருப்பதாக குறைபட்டுக்கொள்கிறார்கள்.

பராமினி டவுன்லோடு download OPERAMINI DESKTOP



சிம்பியன்
ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு.
அதாவது நோக்கியாவின் S60V1, S60V2, S60V3, s60V5, N SERIES, E SERIES. மற்றும் பிளாக்பெர்ரி, சோனிஎரிக்சன், சாம்சங், பனாசோனிக், பாம் ஆப்ரேட்டிங் சிஸ்டம் UI ஆப்ரேட்டிங் சிஸ்டம் இன்னும் சில பிராண்ட்களில் சில மாடல்களூக்கும் மிகமிக நல்ல இனிய பிரவுசிங் அனுபவத்தை கொடுக்கும் . UCWEB என்ற பிரவுசர். இதை பயன்படுத்தியவர்கள் அடுத்த பிரவுசர்களின் பக்கம் நிச்சயமா செல்ல மாட்டார்கள் என்பது நிச்சயம்.
இதில் டேப் பிரவுசிங் மற்றும் ஒரே நேரத்தில் பல பைல்களை டவுன்லோடு செய்தல், பிரவுசருக்கான கலர்களை மாற்றியமைத்தல், என பல வசதிகள் உள்ளன. இதிலும் ucweb6.3 என்ற தொகுப்பு சிறப்பான முறையில் நல்ல பிரவுசிங் அனுபவத்தினை தருகிறது, இப்பொழுது இதில் மேம்படுத்தப்பட்ட தொகுப்பாக
ucweb7.0 தொகுப்பு ucweb6.3 யை விட மிக வேகமாக இணையதளங்களை இறக்கி காட்டுகிறது மிகமிக வேகமாக எந்த ஒரு பைலையும் அதாவது பாடல்கள், படங்கள்,வீடியோககள், என அனைத்து வகையான டேட்டாவையும் மிகமிக வேகமாக டவுன்லோடு செய்கிறது .இதன் யூசர் இன்டர்பேஸ் மிக சிறப்பாகவும் அழகாகவும் , பயன்படுத்த எளிதாகவும் உள்ளது.
இதில் உள்ள ஒரே குறை படங்களை தெளிவாகா காட்ட மறுக்கிறது .இதன் அடுத்த மேம்படுத்தப்பட்ட தொகுப்பில் இந்த குறைகளும் சரிசெய்யப்படுமாயின் . இந்த பிரவுசரின் இடத்தை எந்தவொரு பிரவுசராலும் பிடிக்க முடியாது.


தை டவுன்லோடு செய்ய MOBILE DOWNLOAD COMPUTER DOWNLOAD


அடுத்து ஸ்கைபயர், போல்ட், டீசார்க், போன்ற பிரவுசர்கள் எல்லாம் சங்கி மங்கி ரகங்கள். பயன்படுத்தினால் நிச்சயம் கோபப்படுத்தும் வகையராக்கள். அனுபவத்தை பெற விரும்பினால் முயற்ச்சிகலாம்..
நன்றி.