அழிவை நோக்கி நெய்தல்...



கடலும் கடல் சேர்ந்த இடமும் தான் நெய்தல் நிலம். ஆனால் இப்போது துன்பமும் துன்பம் சார்ந்த இடமுமாக மாறிவிட்டது. இன்று மத்தியில் ஆளும் மன்மோகன்சிங் தலைமையிலான மத்தியரசு மீனவர்களை அழித்தொழிக்க முடிவு செய்து விட்டது, ''மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம்'' என்ற பெயரில் புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது இந்த சட்டதின் மூலம் ஆளும் மன்மோகன்சிங்&சோனியா இருவரின் நிஜ முகம் வெளியில் வந்துள்ளது. இவர்கள் உண்மையிலேயே இந்திய மக்கள் மீது பற்று உள்ளவர்களா இல்லை பணத்தின் மீது ஆசை உள்ளவர்களா என்று இந்திய மீனவர்களை யோசிக்க வைத்து விட்டர்கள்,

இந்த சட்டத்தின் சாரம் இதுதான்...

1.மீன்பிடி படகுகளுக்கான லைசென்ஸ் வழங்குவது மற்றும் புதுப்பிப்பது போன்ற அதிகாரங்கள் மாநில அரசிடமிருந்து மத்தியரசுக்கு மாற்றப்பட்ள்ளது.
இனிமேல் கட்டுமரத்தில் மீன் பிடிப்பவன் கூட லைசென்ஸ் வாங்க டெல்லிக்கு செல்லவேண்டும்.
2.கடலில் எந்த இடத்தில் எவ்வளவு நேரத்துக்கு மீன் பிடிக்கவிருக்கிறோம், பயன்படுத்தும் வலை, பிடிக்கப்போகும் மீனின் வகை என் அனைத்தையும் முன்னதாகவே குறிப்பிட வேண்டும்.
3.இந்த விதிமுறைகள் அனைத்தயும் கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகாரம் கடலோரகாவல் படைக்கு வழங்கப்பட்டிருக்கிறது,கடலோரகாவல் படை மீனவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது நல்லெண்ண அடிப்படையில் எடுத்ததாகவே கருதப்படும்,அதற்க்காக அவர்கள் தவறான நடவடிக்கை எடுத்தாலும் கடலோரகாவல் படைமீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.
4.கட்டுமரம்,விசைப்படகு எதுவாக இருந்தாலும் கடல் எல்லையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை தாண்டி மீன்பிடித்தால் 9 லட்சம் அபராதமும் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.


முதலில் மீன்பிடி படகுகளுக்கான லைசென்ஸ் வழங்குவது மற்றும் புதுப்பிப்பது போன்ற அதிகாரங்களை மாநில அரசிடமிருந்து மத்தியரசுக்கு மாற்றும் உரிமை இவர்களுக்கு யார் அளித்தது, இல்லை மாநில அரசுகளிடம் தெரிவித்து இதுபற்றி அந்தந்த மாநில மீனவர்களிடம் கருத்து கேட்டார்களா? அப்படி எதுவும் நடக்கவில்லையே,இப்படி தான்தோன்றித்தனமாக மத்தியரசு முடிவெடுக்கும்போது மாநில அரசு ஏன் மத்திய அரசை கண்டித்து குரல்கொடுக்கவில்லை இல்லை கிடைப்பதில் ஆளுக்கு பாதி என்று கமுக்கமாக இருக்கிறார்களா.

அடுத்து கடலில் எந்த இடத்தில் எவ்வளவு நேரத்துக்கு மீன் பிடிக்கவிருக்கிறோம், பயன்படுத்தும் வலை, பிடிக்கப்போகும் மீனின் வகை என் அனைத்தையும் முன்னதாகவே குறிப்பிட வேண்டும். என்கிறார்கள் சரி இதை அப்படியே எடுத்துக்கொண்டாலும்.. இந்த இடத்தில் இவ்வளவு நேரத்துக்கு மீன் பிடிக்கவிருக்கிறோம், பயன்படுத்தும் வலை இது இந்த இன மீனைத்தான் குறிப்பிட்ட இடத்தில் பிடிக்கிறோம் என்று எப்படி சொல்லமுடியும்,
இதை எல்லாம் கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகாரம் கடலோரகாவல் படைக்கு வழங்கப்பட்டிருக்கிதாம் கடலோரகாவல் படை மீனவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது நல்லெண்ண அடிப்படையில் எடுத்ததாகவே கருதப்படுமாம்,அதற்க்காக அவர்கள் தவறான நடவடிக்கை எடுத்தாலும் கடலோரகாவல் படைமீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாதாம்.
என்னய்யா இது மீனவன் என்பவன் கொத்தடிமயா..?
கடலோரகாவல் படையினரால் தீவிரவாதிகள் ஊடுருவுவதையே தடுக்க முடியவில்லை இந்த லட்சணத்தில் கடலோரகாவல் படைக்கு இது கூடுதல் பணி.
கடலோரகாவல் படை தவறான நடவடிக்கை எடுத்தாலும் கடலோரகாவல் படைமீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாதாம்.அப்ப மீனவன் என்பவன் இழிச்சவாயனா இது எந்த ஊரு நியாயம் கடலோரகாவல் படையினர் என்ன கடவுள்களா.என்னய்யா கொடுமையிது...
அடுத்து கட்டுமரம்,விசைப்படகு எதுவாக இருந்தாலும் கடல் எல்லையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை தாண்டி மீன்பிடித்தால் 9 லட்சம் அபராதமும் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமாம்

நாளைக்கு இவர்களுடைய வாரிசுகள் கடைகளில் திங்க சென்றால்,எங்கு நீ திங்கப்போகிறாய் நீ என்னென்ன திங்கப்போகிறாய் என அனைத்தையும் சொல்லிவிட்டு போ. அங்கு போய் நீ இடம் மாறியொ இல்லை சொன்னதை மாற்றியொ தின்றாயானால் 9 லட்சம் அபராதமும் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.என்று சொல்வார்களா.?

மீனவர்கள் சம்பந்தமாக சட்டம் இயற்றுபவர்கள் மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தொ இல்லை ஓட்டெடுப்பு நடத்தியொ மீனவர்களின் நலன்களுக்கு கேடு இல்லாமல் சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும் அதை விட்டுவிட்டு தான்தோன்றித்தனமாக இவர்களாகாவெ முடிவு எடுக்க மீனவர்கள் என்ன இவர்கள் வீட்டு நாயா...? போட்டதை தின்று செரித்துவிட்டு போக.
அவர்களும் இந்தியர்கள்தான் இந்தியாவின் நலனில் அக்கரையுள்ளவர்கள் நாம் அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் அதை மறந்துவிட்டு அவர்களை குற்றவாளிகளைப் போலவும் தீவிரவாதிகளைப் போலவும் பார்க்கக்கூடாது அந்த கண்ணோட்டத்தில் சட்டங்களை வரையறுத்தல் கூடாது.
100 நாள் வேலைத்திட்டம் கொண்டு வந்த அறிவுஜீவிகளுக்கு இதுகூடவா தெரியவில்லை.
மொத்தத்தில் இந்ததிட்டம் மூலம் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு இந்தியக் கடல்வாசல்களை திறக்கிறார்கள், (இதன் மூலம் தீவிரவாதிகளுக்கும் வாசல் கதவை திறந்துவைக்கிறொம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.)அவர்கள் நம் கடலில் மீன் பிடித்து நமக்கே விற்ப்பனை செய்வார்கள், கூடவெ லஞ்சமும் தருவார்கள் அந்தக் காசுக்காகத்தானே இத்தனை கூத்தும் . இதை கேட்டால் எல்லோருக்கும் வேலை கொடுப்போம் என்பார்கள், மீனவ இனம் தோன்றிய காலம் முதல் சுயமாக வேலை செய்பவர்கள் மீனவர்கள் அவர்களை வெளிநாட்டு மீன்பிடி நிறுவனங்களிடம் அடிமைகளாகச் வேலைக்கு சேர்த்து விடுவதை வேலைவாய்ப்பு என்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த சட்டம் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்கிற நிலைதான் ஒரு பக்கம் இந்திய அரசின் சட்டம் மறுபக்கம் இலங்கை கடற்ப்படை மொத்ததில் மீனவன் என்பவன் இனி கொத்தடிமை...
இதையெல்லாம் மாற்ற வேண்டுமானால் மீனவர்கள் இந்தியா முழுவதும் அரசியல் ரீதியாக ஒன்று திரளவேன்டும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றியை தீர்மானிக்க கூடிய சக்தியாக மாறவேண்டும் அப்பொழுதுதான் அவர்களின் தார்மீக உரிமைகளை பெறமுடியும்.