தமிழர்களுக்கு எதிராக கருணாநிதியின் துரோகம் தமிழ் உணர்வாளார் சீமான் கைது


ய்[யோ]யா கருனாநிதியே உங்களுடைய காங்கிரஸ் விசுவசத்தை காட்ட தமிழர்களுக்காக போராடக்கூடிய தமிழ் உணர்வாளர் சீமானை கைது செய்து புண்ணியத்தை தேடிகொண்டீர்களோ.
உங்களுடைய ராசாவின் மத்தியமைச்சர் காப்பாற்ற துடிக்கும் நீங்கள் அதில் சிறிதளவேணும் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் காப்பாற்றுவதிலும் கவனத்தை செலுத்துங்கள்.

உங்களுடைய கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர்களே
தமிழர்களே நீங்கள் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக வந்து காப்பாற்றுவேன் என்று வசனம் பேசினால் மட்டும் போதாது அதன் படி நடக்கவும் வேண்டும். மீனவன் கடலில் சிங்கள காடையர்களிடம் உயிருக்கு போராடும் போது இங்கு உம்முடைய அமைச்சர்களின் பதவியை காப்பாற்ற அலையாய் அலைகிறீற்கள். இதுதான் உம்முடைய தமிழ்பற்றா ?
தமிழனுடைய உயிர்தானே போனால் போகிறது என்று விட்டுவிட்டீர்களா ?
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக வந்து காப்பாற்றுவேன் என்று வசனம் பேசினால் மட்டும் போதாது அதன் படி நடக்கவும் வேண்டும். அதை விட்டுவிட்டு டெல்லிக்கு கடிதம் எழுதி பிரயோஜனம் இல்லை . உங்களுக்குத்தான் ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் காப்பாற்ற மத்தியரசுக்கு எதிராக போராடவோ பேசவோ மனதில்லை, அதற்க்காக போராடுபவர்களுக்காவது உதவி செய்யலாம் பொன்மனசெம்மல் முன்னால் தமிழக முதல்வர் காலஞ்சென்ற திரு. எம்ஜியார் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தாரே அந்த வழியையாவது பின்பற்றலாமே . அட உதவி செய்யத்தான் முடியலை உபத்திரமாவது கொடுக்காமல் இருக்கலாமே !
சீமான் அப்படி என்ன தவறாகவா பேசிவிட்டார் இனிமேல் இலங்கை கடற்ப்படை தமிழக மீனவர்களை தாக்கினால் தமிழர்களை காப்பாற்ற நாங்கள் இங்குள்ள சிங்களனை தாக்குவோம் என்றுதானே சொன்னார் , வேறு ஒன்றும் தவறாக சொல்லவில்லையே ? இதில் இந்திய இறையான்மைக்கு எதிராக எங்கே பேசினார் ?
தேசிய பாதுகாப்பு சட்டத்தின்
கீழ், ஐபிசி 153-ஏ, 188 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளீர்கள். நீங்கள் இந்தி மொழிக்கெதிராக போராடியதற்க்கெல்லாம் தேசிய பாதுகாப்பு சட்டமும் மேற்க்கண்ட சட்டப்பிரிவுகளும் பொருந்தாதா ? என்னய்யா கொடுமையாய் இருக்கிறது!
ராஜிவ் காந்தி என்றைக்கு அண்டோனியாவை அதாங்க சோனியாகந்தியை என்றைக்கு திருமணம் செய்தாரோ அன்றைக்கே இந்தியாவிற்க்கும் தமிழனுக்கும் ஜென்மச்சனி பிடித்தது. மொத்தத்தில் இப்போதைக்கு சோனியாகாந்தி இந்தியாவின் மருமகளா ? இல்லை இலங்கையின் மருமகளா ? என்பதுதான் இந்தியர்களிடம் குறிப்பாக தமிழர்களிடம் இருக்கும் மிகப்பெரிய கேள்வி ?
மொத்தத்தில் கருணாநிதி அவர்களே உங்களுடைய காங்கிரஸ் விசுவாசத்தை குறைத்துக்கொண்டு த்மிழர்களையும் கவனியுங்கள் இல்லாவிட்டால் தேர்தலில் மக்கள் கவனிப்பார்கள்

No response to “தமிழர்களுக்கு எதிராக கருணாநிதியின் துரோகம் தமிழ் உணர்வாளார் சீமான் கைது”

Post a Comment