டைட்டானிக்.









லகின் மிகப்பெரிய கடல் விபத்துக்களை பட்டியலிட்டால் அதில் முதலிடம் பிடிப்பது டைட்டானிக் சம்பவமாகத்தானிருக்கும். ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 1517 பேரை கொடூரமாக பலிகொண்ட துயரச்சம்பவம் இது.
டைட்டானிக் விபத்து நடந்து 100 வருடங்கள் ஆனாலும் அந்த சோகச்சுவடுகள் இப்போதும் அழியாத தடயங்களாகவே உள்ளது. டைடானிக் கப்பல் வடஅயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் கட்டப்பட்டது, 900 அடி நீளமும் 40378 டன் எடையும், 11 அடுக்குகளும் கொண்ட உலகின் மிகப்பெரிய நீராவிகப்பல் இது.
1912 ஏப்ரல் 10ம் நாள் தன்னுடைய முதல் மற்றும் இறுதி பயணத்தை இங்கிலாந்தில் இருந்து தொடங்கியது, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து துறைமுகங்களில் என மொத்தம் 2235 பயணிகளை ஏற்றிக்கொண்டு , அமெரிக்காவை நோக்கி வடஅட்லாண்டிக் கடல்பரப்பில் பயணித்தது. வழியில் S.S.கலிபோர்னியா கப்பலில் இருந்து
டைட்டானிக் கப்பலுக்கு வழியில் பனிபாறைகள் இருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது, ஆனால் இந்த எச்சரிக்ககை செய்தி டைடானிக் கப்பல் கேப்டனால் அலட்சியப்படுத்தப்பட்டது, இதனை அறிந்த S.S.கலிபோர்னியா கப்பல் கேப்டன் கோபத்தில் டைட்டானிக் கப்பலுடன் ரேடியோ இனைப்பை துண்டித்து விட்டார்.
எச்சரிக்ககை அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவு கப்பல் கிளம்பிய நான்காம் நாள் ஏப்ரல் 14 அன்று இரவு 11:40 க்கு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது, கப்பலின் மாலுமி எவ்வளவொ முயற்சி செய்தும் விபத்தை தடுக்கமுடியவில்லை, சில மணிநேர போராட்டத்திற்கு ஏப்ரல் 15 அதிகாலை 2:40 மணிக்கு கடலில் மூழ்கி ஜலசமாதியானது. இந்த கோரவிபத்தில் 1517 பயணிகள் சம்பவ இடத்திலேயெ பலியானர்கள் .
783 பயணிகள் மட்டுமே உயிர் தப்பினார்கள் கப்பல் மூழ்கிய பகுதியில் ஒரு வாரமாக தேடுதல் நடத்தப்பட்டது , ஆனாலும் 300 பேரின் உடல்களை மட்டும் மீட்க முடிந்தது , மீதமுள்ள 1217 பேரும் ஜலசமாதியில் கடல் உயிரினங்களுக்கு இரையானர்கள் .அதன் பின் கப்பலை தேடும் படலம் தொடங்கியது , இந்த தேடுதல் முயற்ச்சிக்கு 73 வருடங்கள் கழித்து ,அதாவது 1985ல் முழுப் பலன் கிடைத்தது, அட்லாண்டிக் கடற்படுகையில் 12000ம் அடி ஆழத்தில் டைட்டானிக் கப்பல் இரண்டாக பிழந்த நிலையில் கிடந்தது காண்போரை கதிகலங்க வைத்தது .
ஆனால் அன்று மட்டும்
S.S.கலிபோர்னியா கப்பல் கேப்டன் கோபத்தில் டைட்டானிக் கப்பலுடன் ரேடியோ இனைப்பை துண்டிக்காமல் இருந்தால் , டைடானிக் பேரழிவை தடுத்து அத்தனை உயிரையும் காப்பாற்றியிருக்கலாம் .
டைட்டானிக் கப்பல் விபத்தின்போது 2மாத குழந்தையாக இருந்த ''மெல்வினா'' உடல் நலக்குறைவால் சமீபத்தில் இறந்து விட்டார் , டைட்டானிக் விபத்துக்கு இருந்த ஒரே உயிர் சாட்சி அவர்தான்.
இப்பொழுது
டைட்டானிக் விபத்துக்கு உயிர் சாட்சி என்று யாரும் இல்லை ,

னாலும் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் மட்டும் இரண்டு துண்டுகளாக! அழியாத சாட்சியாய்! சலனமற்ற காவியமாய்!அட்லாண்டிக் கடற்ப்படுகையில்....