

நாம் அன்றாட தினசரி நாழிதள்கள் மற்றும் வார இதழ்களில் வாலிப சக்தி பெற... 15 நாட்களில் வித்தியாசம் தெரிய!!! என்று முழுப்பக்கத்தில் இவர்களுடைய விளம்பரங்களை நாம் பார்க்கலாம், ஒருவர் நான் தான் தலை சிறந்த மருத்துவர் என்றும் மற்றோருவர் தான் பரம்பரை வைத்தியர் என்றும், இன்னொருவர் நான் 7 தலைமுறையாக ஆண்மை குறைக்கு வைத்தியம் பார்ப்பதாகவும் ஒரே வாரத்தில் குனப்படுத்துகிறேன். ஒவ்வொரு ஊரிலும் இன்னன்ன நாட்களில் எந்த தேதிகளில் பார்க்கலாம் என்றும் மற்றொருவர் இல்லை இல்லை ஒரெ வாரத்தில் யாராலும் குணப்படுத்த முடியாது அப்படி சொல்பவர்களை நம்பி ஏமாறவேண்டாம் நாங்கள் தான் இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவர்கள் என்றும் சித்த மருத்துவம் என்பது மருந்து உட்க்கொண்டு 3 முதல் 5 நாட்களில் மாற்றம் தெரிய வேண்டும் .



இவர்களிடம் வைத்தியம் பார்த்தவர்கள் யாருடைய நிலையிலும் முன்னேற்றம் இருக்காது , வைத்தியம் பார்த்தவர்களும் வெளியில் ஆண்மை குறைவுக்கு இன்னாரிடம் வைத்தியம் பார்த்து பயனில்லை என்று சொல்லவும் மாட்டார்கள் காரணம் தங்கள் குறை மற்றவர்களுக்கு தெரிந்தால் அசிங்கம் என்று மறைத்து விடுவார்கள் இது இவர்களுக்கு நல்ல வசதியாக போய் விட்டது .
என்னதான் மாத்ருபூதம் போன்ற பாலியல் மருத்துவர்கள் இவர்களை போன்ற போலிகளிடம் செல்ல வேண்டம் என்று சொன்னாலும் நம் மக்கள் திருந்தப் போவதில்லை அன்றும் இன்றும் என்றும் இவர்களுடைய காட்டில் அடை மழைதான் இந்த பூனைகளுக்கு எப்போது யார்தான் மணி கட்டுவார்களொ இவர்களுடைய கொட்டம் என்று அடங்குமோ தெரியவில்லை.
வழக்கம் போல் இதை தடுக்க வேண்டியவர்கள் தூங்கி கொண்டிருக்கிறார்கள், ஏதாவது உயிரிழப்பு இதன் மூலம் நடந்தால்தன் புயலாக கிளம்புவார்களோ.?