கடந்த 6/8/2010 அன்று திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமணைக்கு நண்பர் ஒருவருக்கு CT ஸ்கேன் எடுக்க சென்றோம். ஆனால் நான் அங்கு கண்ட காட்சிகள் மனதுக்கு நெருடலாகவே இருந்தது காரணம் மருத்துவமனைக்குள் நாய்களும் பன்றிகளும் சர்வசாதாரணமாக உள்ளே திரிகிறது .
அங்கு அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளுக்கும் குறை இல்லை இத்தனைக்கும் மருத்துவமனை உள்ளேயே ஒரு காவல் நிலையமும் உள்ளது.
இதை விட கொடுமை என்னவென்றால் ஸ்கேனிங் பிரிவில் 15 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவன் சர்வ சாதாரணமாக அனத்து பகுதிகளுக்கும் சென்று வருகிறான் ஸ்கேனிங் ரிப்போர்ட்களையும் ஸ்கேனிங் படங்களையும் அடுக்கி வைத்துக்கொண்டும் உள்ளான்
இதயும் கிழே உள்ள புகைப்படத்தின் மூலம் பாருங்கள்
ஸ்கேனிங் எடுக்க வெளி நோயளிகளுக்கு நபர் ஒன்றுக்கு ரூபாய் 500 வாங்குகிறார்கள் நாங்கள் சென்றபோது இரண்டு நோயளிகளுக்கு கட்டண ரசீது தரவில்லை கேட்டால் வெண்டியதில்லை என்று கூறிவிட்டார்கள்.
மொத்தத்தில் அரசு மருத்துவமனையில் சுகாதாரக்கேடும் தில்லுமுல்லும் நன்றாகவே உள்ளது.
கவணிக்கவேண்டியவர்கள் கவணித்தால் சரி !
திண்டுக்கல் அரசுமருத்துவமனையின் அகோர நிலை
Posted by
வானம்பாடி
at
Wednesday, August 11, 2010
11 August, 2010
Labels:
புலனாய்வு