மாயன் இனம்
Posted by
வானம்பாடி
at
Thursday, December 10, 2009
10 December, 2009
Labels:
இனம்
மாயன் நாகரீகம் என்பது பழங்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிக்கொ,குவாத்தமாலா,கொண்டுராஸ் போன்ற நாடுகள் பரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முன்பிருந்த அமெரிக்காவின் முழுவளர்ச்சி பெற்ற ஒரெ எழுத்து மொழியை கொண்டிருந்தது.
இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களால்தான். கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம்,எழுத்து வடிவம், வானியல்,போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர்.
மிகப்பெரிய, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 களில், மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது,அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியியது,ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம்,போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் 6 இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.
மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும்,மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அரெபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள்.இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்ட குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடகலையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகது. நவீன வரலாறு,சமூக ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் காலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.
மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு உலொகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சார சின்னங்களாகக் காணலாம்.
மற்ற பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன்,சந்திரன்,புதன்,சுக்கிரன்,போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக கண்கானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை ஒட்டியே சட்ங்குகளை நடத்தினர்.ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் சடங்கு ஒன்றை நடத்துவர்.
ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்ப்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தங்கள் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருஸ்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.
இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல் பூண்டு இல்லாமல் அழிந்து போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள். காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கமுடியவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன் இன மக்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.(இருக்கலாம்)
கிச்செனிட்சா என்பது மெக்சிக்கோ நாட்டின், யுகட்டான் என்னுமிடத்திலுள்ள,கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது மாயன் நாகரிக காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயன் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி,பி 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், தொல்டெக் அரசனான குவெட்சால்கோட்டில், என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எறிந்த கட்டிடங்களின் மிச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது. அமெரிக்க தொல்ப்பொருளாய்வியல் கூட்டமைப்பின் கருத்தின்படி சிச்சென் இட்சாவிலுள்ள சிதைவுகள் அரசாங்கச் சொத்து. எனினும் சிதைவுகள் காணப்படும் இடமானது 'பிஸ்டெ' நகர மக்காளின் கூட்டுரிமையும் பார்பசனொஸ்ரது (19-ஆம் நூற்றாண்டுதொட்டு யுகட்டான் நகரின் மிகத்திறம்படைத்த குடும்பளில் ஒன்று) தனிப்பட்ட உரிமையும் சேர்ந்த உரிமையுள்ள இடமாக கருதப்படுகிறது.
எல்காஸ்ட்டிலோ பிரமிட் மெக்சிக்கொவின் மாநிலமான யுகட்டானிலுள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெசோ அமெரிக்க படிக்கட்டுப் பிரமிட் ஆகும். எல் காஸ்ட்டிலோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் ஸ்பானிய மொழிச்சொல்லாகும்,
9 ஆம் நூற்றாண்டளவில்,மாயன் நாகரிக மக்களால் கட்டப்பட்ட இது குகுல்கன் (குவெட்சால்கோட்டில் என்பதற்கான மாயன் மொழிச் சொல்) கடவுளுக்கான கோயிலாகப் பயன்பட்டது.
குகுல்கன் கோவில் இது சதுரவடிவத் தளங்களைக் கொண்ட ஒரு படிக்கட்டுப் பிரமிட் ஆகும். இதன் நான்கு பக்கங்களிலும், மேலேறிச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன. உச்சியில் கோயில் அமைந்துள்ளது. காலத்துக்குக் காலம், பழைய பிரமிட்டுகளைப் பெருப்பித்து அவற்றைப் பெரிய பிரமிட்டுகளாக உருவாக்குவது மெசோ அமெரிக்க நகரங்களில் வழக்கமாக இருந்தது. இதுவும் அத்தகைய ஒரு பிரமிட்டுக்கான எடுத்துக்காட்டு ஆகும். இப்போதைய பிரமிட்டின் அடிப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள கதவொன்றின் வழியாக உள்ளே சென்று பழைய பிரமிட்டில் அமைந்துள்ள படிமீது ஏற முடியும். உள்ளே அமைந்துள்ள பழைய பிரமிட்டின் உச்சியிலுள்ள அறையொன்றில் குகுல்சான் மன்னனின் அரியணை அமைந்துள்ளது. இதன் வடிவம் சந்திரகால அட்டவணையான புதிய பிரமிட்டை உள்ளடக்கிய சூரியகால அட்டவணையாக பழைய பிரமிட் உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் கட்டமைப்பு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது பாழடைந்த நிலையிலிருந்து அறைகுறையாக மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது. இதன் இரு பக்கங்கள் வாசிங்டன் நகரிலுள்ள கார்னெகி கல்வி நிறுவனத்தின் 17 ஆண்டுகால பெருமுயற்சியால் ஏறத்தாழ முழுமையுமாக மறுகட்டுமானம் செய்யப்பட்டது. நன்கறிந்த மாயன் நாகரீக நிபுணர் சில்வேன்ஸ் ஜீ மார்லே என்பவரது தலைமையில் 1920 களின் கடைசிக்காலத்தில் தொடங்கிய இந்த மறுகட்டுமானப்பணி 1940 ஆம் ஆண்டு நிறைவேறியது. இந்த கோயில் மெக்சிகோவின் புகழ்வாய்ந்த சின்னமாக மாறியது. மற்ற இரு பக்கங்களை மெக்சிக்கோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980-களில் புனர்நிர்மாணம் செய்தனர்.
நான்கு பக்கதிலும் படிக்கட்டுகளை உடைய இக்கட்டிடத்தின் ஒவ்வொரு படிக்கட்டும் 91 படிகளை கொண்டதாக அமைந்துள்ளது. மேல்தளத்தையும் ஒரு படியாகக் கணக்கிட்டால் மொத்தம் 365 படிகள். ஒவ்வொரு படியும் ஹாப் என்னும் மாயன் நாகரீக கால அட்டவணையின் ஒரு நாளை குறிக்கிறது. இந்த கட்டிடத்தின் உயரம் மேல்தளம் வரை 24 மீட்டர்,கூடுதலாக மேலுள்ள கோயில் ஒரு 6 மீட்டர். சதுரமான கீழ்த்தளம் குறுக்கில் 55.3 மீட்டராக உள்ளது.
பிரமிட்டின் வெளிமுனையிலுள்ள பெரிய படிகள் ஒன்பதும் சூரியக் குடும்பத்தின் ஒன்பது கோள்களை குறிப்பதாகக் கருதப்படுகிறது.
ஸ்பெயினின் யுகாட்டன் ஆக்கிரமிப்புக் காலமான 1530-களில் ஆக்கிரமிப்பு அரசர் இளைய ஃப்ரான்சிஸ்கோ-டி-மான்டியோ இந்த கட்டிடத்தின் மேல் பீரங்கி பொருத்தி கோட்டையாக பயன்படுத்தினார்.
இன்று 'எல் காஸ்ட்டிலோ' மிகப்புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மெக்சிகோவின் சுற்றுலாத்தலங்களில் ஒன்று.
மாயன் இனப் பழங்குடியினரைப் பற்றிய திரைப்படம் அபோகலிப்டோ (Apocalypto).
மாயன் இனம் அழிந்த காலகட்டத்தின் பின்னனியில் எடுக்கப்பட்ட கற்பனைக் கதை இது. திரைப்படம் என்பாதால் மாயன் வரலாறுக்கும் படத்தின் கதைக்கும் வேறுபாடு இருக்கலாம்...
No response to “மாயன் இனம்”
Post a Comment