புலிகளே ஜாக்கிரதை உங்கள் இடத்தில் புதிய படை. இது இங்கை அரசின் சதியாக கூட இருக்கலாம் ..!


இலங்கையில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட எல்லா போராட்டக்குழுக்களும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன இனிமேல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் யாரும் ஈடுபடமுடியாது. என்று போர் முடிந்ததும் இது இலங்கை மக்களுக்கு ராஜபக்சே கூறினார்.
ஆனால் புலிகளின் தோல்விக்கு பிறகு சப்தமே இல்லாமல் இலங்கையின் கிழக்கு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு , அதே விடுதலை போராட்டத்தைத் தொடரும் முடிவோடு ஆயுதங்களை உயர்த்தி இலங்கை அரசை அதிரவைத்துள்ளது "மக்கள் விடுதலை ராணுவம்"
பிரபாகரானுக்கு பிறகு புலிகள் அமைப்பின் எதிர்காலம் குறித்து பலவித சர்ச்சைகள் அர்ங்கேறும் நிலையில் இலங்கையின் சரித்திரப்போக்கை மாற்றியமைக்கும் வலிமை கொண்டதா இவ்வமைப்பு என்ற ஆராய்ச்சிகளும் தொடங்கியுள்ளன இலங்கையில்.
கோணேஸ் என்னும் புனைபெயரைக் கொண்டவர்தான் இந்த புதிய இயக்கத்தின் தளபதியாக தன்னை அரிவித்துள்ளார், இவர் ஏற்க்கனவெ புலிகள் அமைப்பில் இருந்தவர்.
1983 களில் உத்திரப்பிரதேச காடுகளில் பயிற்ச்சி அளிக்கப்பட்ட போது பயிர்ச்சி பெற்றவர் ,பின்பு புலிகள் அமைப்புடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளினால் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி தனியாக செயல்பட்டு வந்தார்,. தொடர்ந்து கிழக்கில் இலங்கை அரசுக்கெதிரான போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டு சிறயிலடைக்கப்பட்டார், பின்பு அங்கு இருந்து தப்பித்து கியூபா சென்றவர் அங்கிருக்கும் போராளிக்குழுக்களிடம் சிறப்பு பயிற்ச்சி மற்றும் கொரில்லா போர் முறைகளையும் கற்றுக்கொண்டு இப்போது இலங்கைக்கு வந்துள்ளார்,

புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து தனியாக தன்னுடன் பயிற்ச்சி பேற்ற சிலரையும் இனைத்து இக்குழுவை உருவாக்கியுள்ளார், கடைசியாக நடந்த போரில் தப்பி பிழைத்த புலிகளில் சிலரும் கருணாவுடன் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து தனியாக வந்த புலிப்படயினரும் ( ருணாவுடன் வந்தவர்களில் பாதிப்பேரை கருனா கண்டுகொள்ளவில்லை அவர்களும்) இவ்வியக்கத்தில் இணைந்துள்ளனர், இது மட்டும் இல்லாமல் முகாம்களில் இருக்கும் தமிழர்களில் இருந்தும் இவ்வியக்கத்தில் இணைய மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கோணெஸ் கூறியிருக்கிறார்,
இவ்வமைப்பில் இருந்து சிலர் பாலஸ்த்தீன விடுதலை இயக்கம், கியூபா கொரில்லா குழுக்கள் மற்றும் இந்தியாவிலுள்ள மாவோயிஸ்ட்களிடமும் பயிற்ச்சிக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், கோணெஸ் கூறியிருக்கிறார்,
புலிகள் அமைப்பை போலவே இவர்களும் தமிழ்ஈழம் பெற்றே தீருவது என்ற முடிவுடன் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் மேலும் புலிகளைப் போல் மரபுவழி ராணுவப் போராக இல்லாமல் கொரில்லா தாக்குதல்களையே தொடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார்,

ஆனால் இவ்வியக்கம் பற்றிய மாற்று கருத்துக்களும் கிளம்பியுள்ளன , அது என்னவென்றால் இவ்வியக்கம் எதிர்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகா மற்றும் இறுதிப்போர் நடந்த போது பிரபாகரனால் பிரித்து இலங்கையின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட புலிகளையும் கொன்றொழிப்தற்க்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் "மக்கள் விடுதலை ராணுவம்" என்று தமிழ் தலைவர்களில் ஒருவரான மனோகணேசன் கருத்து தெரிவித்துள்ளார்............

மொத்தத்தில் புலிகள் மற்றும் ஈழத்தமிழ் மக்களே நீங்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய காலகட்டமிது ஆகும்...

இலங்கையில் புதிய குழு புருடா! - ஜெகத் கஸ்பர்



வேலுப்பிள்ளைபிரபாகரன் கருத்து வேறுபாடு களை விரும்பாதவர், விமர்சனங் களை வெறுத்தவர் என்றொரு பொய் தோற்றம் வலுவாக வனையப்பட்டிருக்கிறது. தன் இனத்தின் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் அவர் கருதி யவர்களை அவர் வெறுத்தார் என்பது உண்மைதான். அது தான் பிறந்த தமிழ் இனத்தின் மீது கொண்ட தீராக் காதலாலும், பெருமிதத்தாலும். ஆனால் அவர் விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாதவர் என்று பலர் ஏற்படுத்தியுள்ள பிம்பம் உண்மை யல்ல. 1998-ம் ஆண்டு வாக்கில் என்று எண்ணுகிறேன். நான் மணிலா வேரித்தாசு வானொலியில் கடமையாற்றியிருந்த காலத்தில் நடந்த மறக்க முடியா நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது.

வானொலி நேயர் ஒருவர், "தங்கள் ஆளுகைப் பரப்புக்குள் குற்றம் சாட்டப்பட்ட பொதுமகன் ஒருவருக்கு விடுதலைப்புலிகள் உரிய நீதி விசாரணை நடத்தாமல் சர்வாதிகாரத்தன்மையோடு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளனர். இப்படியான விடுதலைப்புலிகளை உங்கள் வானொலி ஆதரிப்பது பிழையான செயல்' -என்ற தொனியில் எழுதியிருந்தார்.

மரண தண்டனைக்கு எதிரான உலகு தழுவிய கருத்தியக்கத்தில் ஆர்வமுடன் பங்கேற்கிறவனென்ற வகையில் இந்த நேயர் எழுதிய கடிதத்தை முக்கிய பிரச்சனையாக முன்வைத்து வானொலியில் நீண்டதொரு விவாதம் நடத்தினேன். முறையான நீதி விசாரணை நெறிகளும், வழிமுறைகளும் இன்றி மரண தண்டனை போன்ற இறுதித் தண்டனையை வழங்குவதென்பது பாசிச அமைப்புகளால் மட்டுமே செய்யக்கூடியது என்ற ரீதி யில் மிகக் கடுமையான விமர் சனத்தை முன்வைத்தேன்.

ஒலிபரப்பு நிறைவுற்று இருமணி நேரத்திற்குள் வன்னிப் பகுதியி லிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது சண்டைக் காலமாயிருந்ததால் தங்களது வர்த்தகக் கப்பல்களின் பெயரில் பெறப்படும் செயற்கைக் கோள் தொலைபேசிகளை அவர்கள் காட்டுக்குள் வைத்து பாவித்து வந்தார்கள் என நினைக்கிறேன். அழைப்பில் வரும் சுமார் இருபது இலக்க எண்களைப் பார்த்தாலே புரிந்து விடும். அது வன்னிக்காடுகளிலிருந்துதான் வருகிறதென்பது. பேசுவதற்கு பெரும் செலவு ஆகும் எனவும் பின்னர் நான் அறிந்தேன். அன்றைய தினம் அழைப்பில் வந்தார். தன்னை பரா என்றும் தமிழீழ நீதித்துறை பொறுப்பாளராய் இருப்பதாயும் அறிமுகம் செய்து கொண்டார். ""என்ன ஃபாதர்... நீங்கள் ரேடியோவிலெ கதைச்சுப் போட்டீங்கள், இஞ்செ எங்களுக்குத்தான் மண்டையிடி. தலைவர் (பிரபாகரன்) அடியடா, பிடியடா என்று நிற்கிறார். சனம் மணிலாவுக்கு குற்றக் கடிதம் எழுதுறமாதிரிதான் உங்கட நீதித்துறை செயல்படுதா என்று கேட்கிறார்...'' என்பதாக உரையாடலை தொடங்கியவர் மிகவும் பண்பாக, ""ஃபாதர், அந்த நேயர் உங்களுக்கு பிழையான தகவல் தந்திருக்கிறார். அதனை தலைவருக்கு நாங்கள் விளக்கிச் சொல்லியிட்டம். ஆனால் தலைவர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை- தீர்ப்பு விபரங்கள் மட்டுமல்ல, தமிழீழ நீதித்துறை அமைக்கப்பட்டபின் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து வழக்கு விபரங்களையும் உடனே உங்களுக்கு அனுப்பித் தரும்படி அறிவுறுத்தியுள்ளார். உங்கட ஃபாக்ஸ் (Fax) நம்பர் தாருங்கோ. எல்லா விபரங்களையும் அனுப்பிப் போட்டு இரவுக்கே தலைவருக்கு நான் பதில் சொல்லோணும்'' என்றார்.

நானும் எனது அலுவலக தொலைநகல் (Fax) எண்ணை பரா அவர்களுக்குத் தந்தேன். சுமார் ஒன்றரை மணி நேரம் 140-க்கும் மேலான பக்கங்கள் எம் தொலைநகல் கருவியில் வந்து விழுந்து கொண்டிருந்தன. வந்து முடிய அதிகாலை மூன்று மணி ஆயிற்று. வியப்பு என்னவென்றால் விடுதலைப் போராட்டத்திற்கு ""துரோகம்'' செய்பவர்களை மட்டும்தான் பிரபாகரன் அவர் களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. துரோகத்தின் சம்பளம் மரணம் என்றே அங்கு இருந்திருக்கிறது. அதே வேளை துரோகம் தவிர்த்த ஏனைய குற்றங்கள்- கொலைக்குற்றங்கள் உட்பட- யாவுமே சிவில் சட்ட அடிப்படையிலேயே விசாரிக்கப் பட்டு தண்டனைகள் வழங்கப் பட்டிருக்கின்றன. உண்மையில் 1995 இறுதி தொட்டு 1999 தொடக்கம் வரை வன்னிப் பகுதியில் தமிழீழ நீதித்துறை மொத்தத்தில் மரண தண்டனை வழங்கிய தீர்ப்புகள் நான்கு மட்டுமே என்றும், அவற்றிலும் கூட ஒன்று மட்டுமே நிறை வேற்றப்பட்டதாகவும் ஏனையவர் கள் தலைவரிடம் கருணை மனு சமர்ப்பித்துள்ளதாகவும் பரா கூறினார். பிரபாகரன் அவர்கள் மீதான என் தனிப்பட்ட மதிப் பினை மிகவும் உயர்த்திச் சென்ற நிகழ்வுகளில் இந்நிகழ்வு என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஏனென்றால் நான் ஓர் சாதாரண ஒலிபரப் பாளன், எனது விமர்சனத்திற்கு உரிய பதில் தரப்பட வேண்டும் என்று பிரபாகரன் நினைத் திருக்கிறார் என்பது மிகப்பெரிய மனமுதிர்ச்சியாகவும், தலை மைத்துவப் பண்பாகவும் எனக்குப் பட்டது.

அதுவும் செயற்கைக்கோள் தொலைநகலி வழி தகவல் அனுப்புவ தென்பது ஒரு பக்கத்திற்கே பத்து டாலர்களுக்கு மேல் ஆகும் என பின்னர் அறிய வந்தேன். எனக்கு அன்று பரா அவர்கள் அனுப்பிய 140-க்கும் மேலான பக்கங்களுக்கு மட்டுமே சுமார் 1500 டாலர்கள் ஆகியிருக்கும். அன்றைய இலங்கை பண மதிப்பில் அது சுமார் ஒரு லட்ச ரூபாய். புலம்பெயர் தமிழர்களிடையே உரையாற்றுகையில் இதனை நான் முக்கியமாகக் குறிப்பிடுவதுண்டு. அப்போதெல்லாம் நான் சொல்ல விரும்பியது, ""தூர விலகி நின்று, எவ்வித பங்களிப்புகளும் விடுதலைக்குச் செய்யாமல் மேதாவித்தனமாக விமர்சித்துக் கொண்டிருப்பவர்களைத்தான் பிரபாகரன் அவர்களுக்குப் பிடிக்காதேயன்றி, விடுதலையை நேசித்து ஈடுபட்டிருக்கிறவர்களின் விமர் சனங்களை அவர் மதித்து மிகக் கவனமாகக் கேட்கிறார் என்பதே எனது அனுபவம்'' என்ற செய்தியை.

இதனை இன்றைய காலத்தில் மிக முக்கியமானதாகக் குறிப்பிட்டு எழுதக் காரணங்கள் உண்டு. விடுதலைப் போராட்ட இயக்கம் மிகப்பெரிய பின்னடைவினைக் கண்டுள்ள இக்கால கட்டத்தில், போராட்ட இயக்கத்தின் கட்டளைக் கட்டமைப்பு பற்றின தெளிவின்மையும் ஐயங்களும் நிலவுகிற நிலையில், ரணம்பட்ட தமிழ்மக்களின் உணர்வுகள் கொந் தளித்துப் போயிருக்கிற சூழமைவில் விடுதலைப் போராட்டக் களத்தினை கட்டுப்படுத்தி நெறியாழ்கை செய்ய விழைகிறவர்களின் திட்டங்கள், செயல் முறைகள் நேர்மையானவையா, உண்மை யானவையா என்பதை பொறுப்புணர்வோடு விவாதிக்கிற வெளியொன்று அத்தியா வசியமாகிறது. அத்தகைய விவாத வெளி ஒருசிலருக்கு எரிச்சல் தருகிறதென்பதே நம் ஐயங்களையும், அச்சங்களையும் மேலும் அதிகமாக்குகிறது.

இரு வாரங்களுக்கு முன் ஈழத்திலிருந்து என் பழைய வானொலி முகவர் மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். போர் உக்கிரமாய் நடந்த களங்களின் செய்திகளை துணிவுடன் தாமதமின்றி அந்நாட்களில் எமக்குத் தந்து கொண்டிருந்த துணிவாளர். 2002-க்குப் பின் அவரோடான தொடர்புகள் இல்லாதிருந்தது. மீண்டும் மின் அஞ்சல் மூலம் தொடர்புக்கு வந்த அவர் தனது குறுமடலில் குறித்திருந்த சில உணர்வுகள் கசப்பான இன்றைய உண்மைகள். இவ்வாறு அவர் எழுதியிருந்தார்: ""தமிழீழ விடுதலையின் எதிர்காலம் பற்றின கவலை எம்மையெல்லாம் இங்கு ஆட்கொண்டுள்ளது. ஒருவகையான மர்மத் தன்மையை உணர முடிகிறது. இங்கிருந்து பார்க்கிறபோது எல்லாமே மாயையோ என எண்ணத் தோன்றுகிறது'' என்பதாக எழுதியிருந்தார்.

அவரது கூற்று உண்மை. விடுதலைப்புலிகள் இயக்கம் கட்டுக்கோப்பான பேரியக்கமாய் உலகின் கசப்பான வியப்பாய் நின்ற காலத்திலேயே சதிகளும், ஊடுருவல்களும், துரோகங்களும் வெற்றிகரமாய் இலங்கை-உலக சக்திகளால் நடத்தமுடிந்ததென்றால், இன்றைய சூழலில் அது எளிது. உண்மையில் புலம்பெயர் தமிழர் மத்தியில் அதனை இலங்கை -உலக சக்திகள் எளிதாக நடத்துமெனவும் முன்னர் ஒருமுறை எழுதியிருந் தேன். எனவேதான் கூச்சல்வாதிகள், சுயநலப் பேர்வழிகளிடமிருந்து விடுதலைக் களத்தை காப்பாற்ற ஜனநாயக ரீதியான, வெளிப்படையான இயங்குதலே இன்றைய காலகட்டத்திற்கு உகந்ததாயிருக்க முடியும்.

உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். ஓரிரு நாட் களுக்கு முன்பு மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக ஏதோ ஒரு புதிய குழு அறிவித்திருந்தது. அதனை தமிழ் சார்ந்த இணைய தளங்களெல்லாம் ஏதோ புதிய விடியலுக்கான பூபாளம் போல் விசிலடித்துக் கொண்டாடி யிருந்தது. ஆனால் விசாரித்தால் இச்செய்தியின் பின்னணியில் இருப்பது இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவும், செத்துப்போனதாய் கருதப்பட்ட பழைய ஓர் தமிழ் இயக்கமும் எனத் தெரிய வருகிறது. இச்செய்தியின் நோக்கம் இதுதான்: ""வவுனியா முகாம்களிலிருந்து மக்கள் விடுதலையான பின் அரசியல் தீர்வு பற்றின அழுத்தங் களை உலகம் இலங்கை மீது ஏற்படுத்தும். அதில் தமிழீழ தாயக நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ள ராணுவத் தினரை கணிசமாக வெளியேற்றுவதும் உள்ளடங்கும். அந்நிலை வருகையில் ராணுவ ஆக்கிரமிப்பை தொடர வைக்கத் தேவையான வாதிடல்களுக்காகவே இப்படியான புதிய ஆயுதக்குழுக்கள் அறிவிப்புகள்.

எனவேதான் விடுதலைப் போராட்ட களம் ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும் வெளிப் படைத்தன்மை கொண்டதாகவும் நிறுவப்பட வேண்டுமென்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். சமீபத்தில் அனைத்துலக மனித உரிமைகளுக்கான நீதி விசாரணையாளர் ஒருவர் -பெயர் மறந்துவிட்டேன். தனது உரையொன்றில் கூறியிருந்தார், ""உலகின் ஜனநாயக அமைப்புகளும், உபகரணங்களும் தருகிற அசாத்தியமான வாய்ப்புகளை தமிழர்கள் உரிய முறையில் பயன்படுத்தவில்லையென்பது கவலையளிக்கிறது'' என்று. உண்மை, கசப்பான உண்மை.

ஜனநாயக அலகுகளின் உபகரணங்களின் வலுவினை, வளங்களை எவ்வாறு உணர்ந்துகொள்வது? கடந்த வாரம் இந்திய பாராளுமன்ற இரு அவைகளிலும் ஈழத்தின் இன்றைய நிலை குறித்து நடந்த விவாதங்களைப் பார்த்தாலே போதுமானது. பாரதிய ஜனதா கட்சியின் சுஷ்மா ஸ்வராஜ், வெங்கைய நாயுடு இருவரின் உரைகளும் கண்களில் நீர்மல்க வைத்தன. வெறும் அரசியல்வாதிகளாக அவர்கள் பேசவில்லை. உண்மையில் தமிழர்களாக நின்று அவர்கள் பேசியது போலவே இருந்தது. அவர்களது உரைக்கு நிகராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ராஜா அவர்களது உரையும் இருந்தது. தோழர் ராஜா மிகவும் அடிப்படையான, முக்கிய கேள்விகள் சிலவற்றையும் முன் வைத்தார்.

தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளும் ஓருணர்வில் நின்ற காரணத்தால் வெளியுறவு அமைச்சர் பதில் சொல்ல நிர்பந்திக் கப்பட்டார். அதுதானே நாட்டின் கொள்கையாகவும் மாறும்.

நக்கீரன் இதழில் அருட்தந்தை ஜெகத்கஸ்பர்....

Huspend wife jokes

மனைவி: ராத்திரி தூக்கத்துல ஏன் சிரிச்சிங்க.?
கனவன் :
கனவுல நயந்தரா வந்தா.
மனைவி: ப்புறம் ஏன் கத்துனீங்க.?
கனவன் : நடுவுல நீ வந்த.........!
........................................................................................................................................................

COMPUTER BIOS SOUND DIFFRENT MODE AND MISTAKES


1 அல்லது 2 பீப் =

ராம் மெமரியில் தவறு உள்ளது . மதர்போர்ட் அல்லது
ராம் மெமரியில் என்ன பிரச்சினை என்று பார்க்க வேண்டும்.

3 பீப் =

ராம் மெமரியில் முதல் 64kp இடத்திலேயெ பிரச்சினை இறுக்கிறது,
மதர்போர்ட் அல்லது ராம் மெமரியில் என்ன பிரச்சினை என்று பார்க்க வேண்டும்.

4 பீப் =

சிஸ்டம் இயக்கத்தில் பல்வேறு டைமர்கள் உள்ளது . அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்டு பிரச்சினை உள்ளது . இதற்க்கு மதர்போர்டை சரி செய்ய வேண்டும்

5 பீப் =

பிராசசர் தகறாறு . அதன் இயங்கும் தன்மைக்கு ஆபத்து இல்லை , அப்படி ஏதாவது இருந்தால் பூட் ஆகாது. பிராசசர் ஓவர் ஹீட் ஆகிறதா என்று பார்க்க வேண்டும்.

6 பீப் =

கீ போர்டு, அதன் கன்ட்ரோலில் பிரச்சினை, அல்லது கேட்420 தகராறு ஏற்பட்டுள்ளது , கீ போர்டு சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும், திரும்ப பீப் ஒலி கேட்டால் மதர் போர்டில் கீ போர்டு கண்ட்ரோலடர் சிப் சரியாக பொறுத்தப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும் , ச்ரியாக பொறுத்திய பின்னரும் பிரச்சினை என்றால்
மதர்போர்டை சரி செய்ய வேண்டும்.

7 பீப் =

பிராசசரில் விர்சுவல் மோட் சரி பார்க்கும் போது தவறு ஏற்ப்படுகிறது மதர்போர்டில் உள்ள ஜம்ப்பர்கள் சரியாக கான்பிகர் செய்யப்பட்டுள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும்.

8 பீப் =

டிஸ்பிளே கார்டு சரியாக இல்லை மதர் போர்டு அல்லது டிஸ்பிளே கார்டினை சரி பார்க்கவும்.

9 பீப் =

பயாசின் சீமோஸ் சிப் சார்ந்த தவறு , இதனை மாற்ற வேண்டும் , அல்லது மதர் போர்டையே மாற்ற வேண்டும் ,.

10 பீப் =

சீமோஸ் சிப்புடன் மதர்போர்டு தகவல் பரிமாறிக்கொள்ளும்போது அதில் எழுத முடியாமல் பிரச்சினை ஏற்ப்படுகிறது , மதர்போர்டின் அனைத்து பகுதிகளும் சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா என்று சரி பார்க்கவும்.

11 பீப் =

பிராசசரின் எல்2 கேச் மெமரியில் சிப்
சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா என்று சரி பார்க்கவும்.


அமெரிக்கன் மெகா ட்ரென்ட் நிறுவனம் அமைத்துள்ள இந்த கட்டமைப்பை பல நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன இதனை அந்நிறுவனப் பெயருடன் இனைத்து AMIBIOS என்று அழைக்கின்றனர்

நட்புக்கவிதை....


ஒரு துளி கண்னீரை துடைப்பது நட்ப்பல்ல!மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதே சிறந்த நண்பணுக்கு அழகு.
.......................................................................................
முல்லோடு வளரும் "ரோஜா"வை யாரும் வெறுப்பதில்லை,
அன்போடு வளரும் "நட்பை" யாறும் வெறுப்பதுமில்லை.
.......................................................................................
புரிந்து கொள்ளாத அன்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்து கொண்ட அன்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை.
................................................................................................................................
மழை வரும்போது நீ குடை கொண்டு போகாதே
மழைத்துளி கூட அழுகிறது உன்னை தொட முடியாமல்
மண்ணில் விழுந்து மடிகிறேன் என்று.
.......................................................................................................................................

SMS JOKES / COLLEGE

மாணவி: ஏய் உனக்கு sms ப்ரீதானெ எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்புடா
மாணவன்: தொடா இன்கம்மிங் கூட ப்ரீதான் நீ போன் பன்னு பாக்கலாம்.
.......................................................................................

ஈழம்


போர்த்துக்கீசியர்கள் 1505-ஆம் ஆண்டு வணிக நோக்கில் இலங்கையில் நுழைகிறார்கள். அந்த நேரத்தில் இலங்கையில் மூன்று நிலப்பரப்பு சார்ந்த அரசுகள் இருந்தன. அவை முறையே, கோட்டை அரசு, கண்டி அரசு மற்றும் யாழரசு (சீதாவாக்கை). இவற்றில் முதலிரண்டும், சிங்கள அரசுகளாகவும், கடைசி தமிழ் அரசாகவும் இருந்தது. தொடர்ந்த பல்வேறு சூழியல் காரணிகள் மற்றும் வாழ்வியல் பயணங்களைச் சந்தித்த இலங்கை, 1802-ல் ஆங்கிலக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டபோது ஆமியன்ஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட இலங்கையின் வரைபடங்கள் இந்த மூன்று அரசுகளையும் தனித்தனியே சுட்டிக் காட்டுகிறது.
இதற்கு முன்னர் கிலேகான் ஒரு தனிப்பட்ட வரலாற்றுக் குறிப்பை ஆங்கில அரசுக்குக் கொடுக்கிறார். அதில் தெளிவாக பண்டைக் காலம் தொட்டு இலங்கையின் வடகிழக்கு நிலப்பரப்பு தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது என்பதையும், சிங்கள இனம், மொழி, கலாச்சாரம் தமிழர்களின் மொழி, கலை, கலாச்சாரக் கூறுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது என்றும் ஒரு வரைவை, பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் அளிக்கிறார். பின்னர் படிப்படியாக மூன்று வெவ்வேறான அரசுகளுமே ஆங்கில ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது என்பதும், நிர்வாக வசதிகளுக்காக, ஆட்சி முறைமைகளுக்காக ஆங்கில அரசு வழமை போல (அதாவது இந்தியாவில் நடந்ததைப் போலவே) இலங்கைத் தீவு முழுதையுமே ஒரே கட்டுக்குள் கொண்டு வந்தது. 1948-ல் இலங்கை ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைகிறது. இது ஒரு சுருக்கமான இலங்கையின் விடுதலைக்கு முந்தைய வரலாறு.
இதனிடையே, 1972-ல் குடியரசுச் சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மேற்கண்ட கேள்விகளை அரசாட்சி முறையாகவே சிங்கள பெரும்பான்மை அரசு முன்னெடுத்தது. 1950-ல் இருந்து தொடங்கிய சிங்களப் பேரினவாத அரசின் ஒருதலைப்பட்சமான போக்கினை எதிர்க்கும் முகமாக ஒரு எதிர்வினையாக திரு.சி.சுந்தரலிங்கனார் தலைமையில் "ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி" என்கிற அமைப்பு உருவாகி, தமிழர்களுக்கான "சுயாட்சி" என்கிற கொள்கை அவரால் முன்வைக்கப்படுகிறது. இதற்கு முன்னரே 1918-ல் திரு.விஸ்வலிங்கம் என்பவர் தனித்தமிழ் நாட்டின் கோரிக்கையை ஆங்கில அரசிடம் வைத்ததும், 1924-ல் திரு.பொன்னம்பலம் ராமநாதன் உருவாக்கிய தமிழர்களுக்கான ஒரு தனி அரசியல் பார்வையும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திரு.சுந்தரலிங்கனார் அவர்களே "தமிழீழம்" என்கிற ஒரு குறியீட்டு அடையாளத்திற்கான காரணியாகவும், தமிழ் தேசியஇனத்தின் உரிமைப்போரை முதன் முதலாகத் துவக்கியவருமாவார். பிற்காலத்தில் இவர் "வன்னிச் சிங்கம்" என்கிற அடைமொழியால் அழைக்கப்பட்டார். 1972-ல், இலங்கைப் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா ஒருதலைப்பட்சமாக உருவாக்கிய ஓட்டுப் பொறுக்கி அரசியல் தந்திரத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட முன்வரைவுகளே இலங்கையில் வாழும் தமிழ் மக்களை ஒரு கடும் சமூகப், பொருளாதார நெருக்கடிகளை நோக்கித் தள்ளியது. போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழலை அவர்களுக்கு உருவாக்கியது.
1972-ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய ஒரு தேர்தல் சூழலில்தான் "தந்தை செல்வா" என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு.S.J.V செல்வநாயகம் "தமிழரசுக் கட்சி" என்கிற ஒரு அரசியல் நகர்வை தேர்வு செய்து பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறார், ஒருதலைப் பட்சமான இலங்கை அரசின் பேரினவாத நடவடிக்கைகளைக் கண்டித்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உதறித் தள்ளிய தந்தை செல்வா, ஒரு இடைத் தேர்தலை சந்தித்து தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவில் மிகப்பெரும் வெற்றி அடைகிறார். வெற்றி அடைந்தது மட்டுமன்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் "தமிழ் மக்கள் தனியானதொரு ஆட்சியைப் பெறுவதைத் தவிர வேறு வழியற்ற நிலைக்கு சிங்களப் பேரினவாத அரசால் தள்ளப்பட்டிருக்கிறார்கள்" என்று கர்ஜனை செய்கிறார்.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த இலங்கை தமிழ் மக்களும், அரசியல் இயக்கங்களும் இணைந்து "தமிழர் விடுதலைக் கூட்டணி" என்கிற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி தங்கள் அரசியல் களங்களை வலிமைப் படுத்திக்கொண்டார்கள், தொடர்ந்த பல்வேறு அரசியல் ஒருங்கிணைவுகளில் 1977 பாராளுமன்றத் தேர்தல்களில் அதிகப்பட்சமாக 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு, தமிழீழம் என்கிற பாதையை நோக்கியே நாங்கள் செல்கிறோம் என்பதையும், அதனை அமைதி வழியிலோ இல்லை போராட்ட வடிவிலோ பெற்றே தீருவது என்கிற முடிவுக்கு வந்தார்கள். இதுதான் வரலாற்று உண்மை.

இன்று பார்ப்பன, பேரினவாத அரசுகளும் உலக ஏகாதிபத்தியங்களும் ஊடகங்களில் பரப்பும், "ஆயுதம் தாங்கிய புலிகள் அமைப்பு" 1980-களில்தான் "தமிழீழம்" என்கிற ஒரு கோரிக்கையை முன்னெடுத்தது என்பது ஒரு வரலாற்றுத்திரிப்பு மட்டுமன்றி, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் விடுதலை உணர்வை எள்ளி நகையாடும் ஒரு பித்தலாட்டம் என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தொடர்ந்து கூற்றியல் நோக்கில் ஆய்வு செய்யும் எவரும் ஒப்புக் கொள்வார்கள்.

தமிழ் இளைஞர்கள் 1968-களில் தங்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக ஆயுதம் ஏந்தவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். தொடர்ந்து தற்காப்பு மற்றும் இன ஒடுக்கலுக்கு எதிரான நிலைப்பாடுகளில் பல்வேறு குழுக்களாக இயங்கிய ஆயுதப் போராட்டக்குழுவினர், "கருப்பு ஜூலை" என்று இலங்கை வரலாற்றில் மட்டுமன்றி மனித சமூகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு அவல நிலையான வெறிகொண்ட பேரினவாதத் தாக்குதலை சந்தித்த பின்பு ஒரு மிகப்பெரும் எழுச்சியை போராட்ட நிலைப்பாடுகளில் கண்டது.

தமிழ்மக்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார்கள். தந்தையின் எதிரில், கணவன்மாரின் எதிரில் எம்குலப்பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். எம் தமிழ்க் குழந்தைகள் ராணுவ வீரர்களால், கால்களைப் பிடித்துக்கொண்டு சாலைகளில் துவைத்து மண்டையைப் பிளந்து கொல்லப்பட்டார்கள். குழுக்கள், குழுக்களாக எம் தமிழ் மக்கள் எரித்துப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இவற்றை எல்லாம் பார்த்துக் கொதித்தெழுந்த தாய்த்தமிழ் மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை இந்திய பார்ப்பனீய மேலாதிக்க அரசுகளுக்குக் கொடுத்த போதுதான், இந்திய அரசும், தமிழக அரசும், தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக அவர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களையும், உதவிகளையும் செய்தார்கள். அதன் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் பதிவுகளும், கொடுமைகளும் நமக்குத் தெரியும் என்பதாலும், நீண்டநெடிய துயரம் மட்டுமே அவற்றில் தோய்ந்து இருக்கும் என்பதாலும் அவற்றை பிறிதொருகாலத்தில் விரிவாகப் பதிவு செய்ய முனைகிறேன்.
காலத்தின் கட்டாயத்தால் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த தமிழ் இளைஞர்கள், வேறுவழியின்றி ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள். வெவ்வேறு குழுவாக பிரிந்து கிடப்பது, விடுதலை இயங்கியல் போராட்ட வரலாற்றை நீர்த்துப் போகச் செய்யும் என்கிற சமூக அறிவியல் உண்மையை உணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பல்வேறு போராட்டக் குழுக்களை ஒருங்கிணைக்க முயன்றார் அல்லது வேறு வழியின்றி ஒழித்தார். அவை அடிப்படை மனிதநேயம் சார்ந்த பலரது நிலைப்பாடுகளில் மாற்றுக் கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தாலும், காலத்தின் தேவை என்பதும், ஒடுக்கப்படும் உயிரின எழுச்சிகளின் வரலாற்றில் தவிர்க்க இயலாதது என்பதும் உலக இயங்கியல் என்கிற அறிவியல் கோட்பாடுகளை ஆழ்ந்து படிப்பவர்களும், விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்பவர்களும் நன்கு அறிவார்கள்.
புலிகளைப் பற்றிய கடும் மரண அச்சத்துடன் இலங்கை படையணி வீரர்களும், இலங்கை ராணுவ தாக்குதல்களைப் பற்றிய கடும் அச்சத்துடன் தமிழ்த்தேசிய இனமும் ஒரு இக்கட்டான அரசியல் மற்றும் நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், மரணம் என்பதும் வேதனை என்பதும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவும், அவற்றை உறுதி செய்ய எம் எதிரிகளும் துயர் கொள்ளக் கூடாது என்கிற உயரிய போர்முறைகளை, மனித நேயம் சார்ந்த பல்வேறு கட்டுப்பாடுகளை விடுதலைப்புலிகள் வைத்திருக்கிறார்கள் என்பதும், பல்வேறு உலக நாடுகளின் அமைதிக் குழுக்களுக்கும், உலகளாவிய ஊடகவியலாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
கடந்த 2006-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் அமெரிக்காவில் "HOUSE INTERNATIONAL RELATIONS" என்கிற ஒரு அமைப்பு, நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் மேம்பாடுகள் குறித்த ஒரு கூட்டத்தைக் கூட்டியது. இதில் தென்கிழக்கு ஆசியநாடுகளின் கூட்டமைப்பு சார்பாக அதன் செயலர் திரு.டொனல்ட் கேம்ப் (MR.DONALD CAMP) பேசினார். வழமை போல தீவிரவாதம் குறித்த அவரது உரையின் நடுவே குறுக்கிட்டுப் பேசிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர், (அதாவது காலிபோர்னியா மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட அமெரிக்கக் காங்கிரஸ் செனட் உறுப்பினர்) திரு.பிராட் சார்மேன் பல்வேறு கேள்விகளுக்கு நடுவே ஒரு ஆய்வுக்குரிய கேள்வியைக் கேட்டார், அந்தக் கேள்வி,

"பயங்கரவாதத் தாக்குதலுக்கும், சட்டபூர்வமான கொரில்லாத் தாக்குதலுக்கும் என்ன வேறுபாடு?"

இதைக் கூட விட்டு விடலாம், இன்னொரு மிக அழகானகேள்வியையும் அவர் கேட்டார், அந்தக் கேள்வி

"அல் கொயதாவிற்கும் அமெரிக்க விடுதலைப் போராட்ட வரலாற்றில் பங்கேற்ற எங்கள் ஜார்ஜ் வாஷிங்டனுக்கும் என்ன வேறுபாடு? உங்கள் பார்வையில் அவரும் ஒரு பயங்கரவாதியா?

இந்தக் கேள்வியைக் கண்டுநிலை குலைந்து போன திரு.டொனல்ட் கேம்ப் பதில் அளிக்க இயலாமல் குழம்பிய காட்சியை நீங்கள் அனைவரும் இணையங்களில் கூடக் கண்டடையலாம்.

அதே கேள்வியைத்தான் இன்று நாங்களும் உலகமக்களிடமும், தமிழர்களைக் கொன்று குவிக்கும், சிங்களப் பேரினவாத அரசின் காவல் விலங்கான மஹிந்த ராஜபக்சேவிடமும், காவல் விலங்குகளுக்கு பாலூட்டிச் சீராட்டும் இந்தியப் பார்ப்பனீய பயங்கரவாத அரசுகளிடமும் கேட்கிறோம்.

இது உலகின் உயர்தனிச் செவ்வினத்தின் விடுதலைப் போராட்டமா? இல்லை பயங்கரவாதமா?

விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்லும், பார்ப்பன ஜெயலலிதாக்களே, சோ.ராமசாமிகளே, தமிழைப் பேசவும் சரியாகத் தெரியாத சுப்ரமனியசாமிகளே, சிங்களப் பேரினவாதங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்ற இந்துராம்களே, அரசியல் பகடைக் காய்களாய் மாறி ஒற்றுமைக்கு மறுக்கும் கோபால்சாமிகளே, தொப்புள் பம்பரப் புகழ் விஜயகாந்துகளே......
இன்றைக்கு தமிழகத்தில், உருவாகி இருக்கும், எழுச்சி அலையானது, ஈழத்தில் துயருறும் எம் தமிழ்மக்களை மட்டுமன்றி, அரசியல் அறிவற்று, அன்றாட வாழ்வியல் போராட்டங்களில் கணந்தோறும் உழைக்கும் வர்க்கத்தில் உறைந்து போயிருக்கும் சிங்களப்பேரினத்தின் மக்களும் அமைதியை அடையட்டும். மனிதம் தழைக்கப்பிறந்த தமிழனின் பெருமையை சிங்களனும் உணரட்டும் என்று ஒரு உணர்வுள்ள தமிழனாக உங்கள் சார்பில் மனிதச் சங்கிலியின் ஒரு ஓரத்தில் நின்றிருப்பேன். என்னைத் தேடாதீர்கள்..... நீங்கள்தான் நான்.

விடுதலைப்புலிகள் உண்மையில் தீவிரவாதிகளா,,,
கை. அறிவழகன்

மாயன் இனம்


மாயன் நாகரீகம் என்பது பழங்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிக்கொ,குவாத்தமாலா,கொண்டுராஸ் போன்ற நாடுகள் பரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முன்பிருந்த அமெரிக்காவின் முழுவளர்ச்சி பெற்ற ஒரெ எழுத்து மொழியை கொண்டிருந்தது.
இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களால்தான். கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம்,எழுத்து வடிவம், வானியல்,போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர்.
மிகப்பெரிய, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 களில், மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது,அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியியது,ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம்,போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் 6 இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.
மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும்,மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அரெபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள்.இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்ட குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடகலையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகது. நவீன வரலாறு,சமூக ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் காலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.
மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு உலொகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சார சின்னங்களாகக் காணலாம்.
மற்ற பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன்,சந்திரன்,புதன்,சுக்கிரன்,போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக கண்கானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை ஒட்டியே சட்ங்குகளை நடத்தினர்.ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் சடங்கு ஒன்றை நடத்துவர்.
ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்ப்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தங்கள் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருஸ்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.
இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல் பூண்டு இல்லாமல் அழிந்து போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள். காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கமுடியவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன் இன மக்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.(இருக்கலாம்)

கிச்செனிட்சா என்பது மெக்சிக்கோ நாட்டின், யுகட்டான் என்னுமிடத்திலுள்ள,கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது மாயன் நாகரிக காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயன் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி,பி 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், தொல்டெக் அரசனான குவெட்சால்கோட்டில், என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எறிந்த கட்டிடங்களின் மிச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது. அமெரிக்க தொல்ப்பொருளாய்வியல் கூட்டமைப்பின் கருத்தின்படி சிச்சென் இட்சாவிலுள்ள சிதைவுகள் அரசாங்கச் சொத்து. எனினும் சிதைவுகள் காணப்படும் இடமானது 'பிஸ்டெ' நகர மக்காளின் கூட்டுரிமையும் பார்பசனொஸ்ரது (19-ஆம் நூற்றாண்டுதொட்டு யுகட்டான் நகரின் மிகத்திறம்படைத்த குடும்பளில் ஒன்று) தனிப்பட்ட உரிமையும் சேர்ந்த உரிமையுள்ள இடமாக கருதப்படுகிறது.


எல்காஸ்ட்டிலோ பிரமிட் மெக்சிக்கொவின் மாநிலமான யுகட்டானிலுள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெசோ அமெரிக்க படிக்கட்டுப் பிரமிட் ஆகும். எல் காஸ்ட்டிலோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் ஸ்பானிய மொழிச்சொல்லாகும்,
9 ஆம் நூற்றாண்டளவில்,மாயன் நாகரிக மக்களால் கட்டப்பட்ட இது குகுல்கன் (குவெட்சால்கோட்டில் என்பதற்கான மாயன் மொழிச் சொல்) கடவுளுக்கான கோயிலாகப் பயன்பட்டது.
குகுல்கன் கோவில் இது சதுரவடிவத் தளங்களைக் கொண்ட ஒரு படிக்கட்டுப் பிரமிட் ஆகும். இதன் நான்கு பக்கங்களிலும், மேலேறிச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன. உச்சியில் கோயில் அமைந்துள்ளது. காலத்துக்குக் காலம், பழைய பிரமிட்டுகளைப் பெருப்பித்து அவற்றைப் பெரிய பிரமிட்டுகளாக உருவாக்குவது மெசோ அமெரிக்க நகரங்களில் வழக்கமாக இருந்தது. இதுவும் அத்தகைய ஒரு பிரமிட்டுக்கான எடுத்துக்காட்டு ஆகும். இப்போதைய பிரமிட்டின் அடிப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள கதவொன்றின் வழியாக உள்ளே சென்று பழைய பிரமிட்டில் அமைந்துள்ள படிமீது ஏற முடியும். உள்ளே அமைந்துள்ள பழைய பிரமிட்டின் உச்சியிலுள்ள அறையொன்றில் குகுல்சான் மன்னனின் அரியணை அமைந்துள்ளது. இதன் வடிவம் சந்திரகால அட்டவணையான புதிய பிரமிட்டை உள்ளடக்கிய சூரியகால அட்டவணையாக பழைய பிரமிட் உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் கட்டமைப்பு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது பாழடைந்த நிலையிலிருந்து அறைகுறையாக மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது. இதன் இரு பக்கங்கள் வாசிங்டன் நகரிலுள்ள கார்னெகி கல்வி நிறுவனத்தின் 17 ஆண்டுகால பெருமுயற்சியால் ஏறத்தாழ முழுமையுமாக மறுகட்டுமானம் செய்யப்பட்டது. நன்கறிந்த மாயன் நாகரீக நிபுணர் சில்வேன்ஸ் ஜீ மார்லே என்பவரது தலைமையில் 1920 களின் கடைசிக்காலத்தில் தொடங்கிய இந்த மறுகட்டுமானப்பணி 1940 ஆம் ஆண்டு நிறைவேறியது. இந்த கோயில் மெக்சிகோவின் புகழ்வாய்ந்த சின்னமாக மாறியது. மற்ற இரு பக்கங்களை மெக்சிக்கோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980-களில் புனர்நிர்மாணம் செய்தனர்.
நான்கு பக்கதிலும் படிக்கட்டுகளை உடைய இக்கட்டிடத்தின் ஒவ்வொரு படிக்கட்டும் 91 படிகளை கொண்டதாக அமைந்துள்ளது. மேல்தளத்தையும் ஒரு படியாகக் கணக்கிட்டால் மொத்தம் 365 படிகள். ஒவ்வொரு படியும் ஹாப் என்னும் மாயன் நாகரீக கால அட்டவணையின் ஒரு நாளை குறிக்கிறது. இந்த கட்டிடத்தின் உயரம் மேல்தளம் வரை 24 மீட்டர்,கூடுதலாக மேலுள்ள கோயில் ஒரு 6 மீட்டர். சதுரமான கீழ்த்தளம் குறுக்கில் 55.3 மீட்டராக உள்ளது.
பிரமிட்டின் வெளிமுனையிலுள்ள பெரிய படிகள் ஒன்பதும் சூரியக் குடும்பத்தின் ஒன்பது கோள்களை குறிப்பதாகக் கருதப்படுகிறது.
ஸ்பெயினின் யுகாட்டன் ஆக்கிரமிப்புக் காலமான 1530-களில் ஆக்கிரமிப்பு அரசர் இளைய ஃப்ரான்சிஸ்கோ-டி-மான்டியோ இந்த கட்டிடத்தின் மேல் பீரங்கி பொருத்தி கோட்டையாக பயன்படுத்தினார்.
இன்று 'எல் காஸ்ட்டிலோ' மிகப்புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மெக்சிகோவின் சுற்றுலாத்தலங்களில் ஒன்று.



மாயன் இனப் பழங்குடியினரைப் பற்றிய திரைப்படம் அபோகலிப்டோ (Apocalypto).

மாயன் இனம் அழிந்த காலகட்டத்தின் பின்னனியில் எடுக்கப்பட்ட கற்பனைக் கதை இது. திரைப்படம் என்பாதால் மாயன் வரலாறுக்கும் படத்தின் கதைக்கும் வேறுபாடு இருக்கலாம்...

மாயன் காலண்டர்


மாயர்கள் என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்ட ‘உலகின் கடைசி நாள்’ விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்’ என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா?

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதை ‘ஜட்ஜ்மெண்ட் டே’ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

அதாவது இப்போது உலகில் வசித்து வரும் நீங்களும், நானும் ஐந்தாவது காலக்கட்ட மனிதர்கள். நான்காவது காலக்கட்டத்தில் வசித்தவர்கள் 5125 வருடங்களுக்கு முன்பாக (கி.மு. 3113ல்) நடந்த ஏதோ ஒரு இயற்கைப் பேரழிவில் மண்டையைப் போட்டிருப்பார்களாம். நிலத்தை மூழ்கடித்த நீரால் அவர்கள் அழிந்திருப்பார்கள் என்று மாயன் கணிப்பு கூறுகிறது. மனிதக்குலம் ஒட்டுமொத்தமாக அழிந்து, மீண்டும் பிறந்துதான் இன்று பூமியின் கடைசிக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பெருமை பெற்ற நீங்கள் குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த கட்டுரையை வாசிக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் சொல்லவில்லை. எப்போதோ செத்துப்போன மாயர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
மாயர்களைப் போலவே உலகில் வாழ்ந்த பல இனத்தவர்களுக்கும் பிரத்யேக காலண்டர்கள் இருக்கிறது. அந்த காலண்டர்களும் கூட உலகம் அழியப்போவதாகவே பயமுறுத்துகிறது. என்ன ஆண்டுதான் கொஞ்சம் முன்னே, பின்னே 2011, 2013 என்று மாறியிருக்கிறது.

உண்மையில் 2012ல் என்னதான் நடக்கப் போகிறது?

எதிர்காலம் குறித்து சீட்டுக்கட்டிலிருந்து கிளி எடுத்துப்போடும் சீட்டை வைத்து சொல்லப்படும் பலன்களை நீங்கள் நம்புகிறீர்களா? இரத்தமும், சதையும், எலும்பும், மூளையும், சிந்தனைகளுமாய் வளர்ந்த உங்களின் எதிர்காலம் ஒரே ஒரு நெல்லுக்காக கிளி அவசரமாக எடுத்துப்போடும் சீட்டில்தான் இருக்கிறதா என்ன? கிளிஜோசியரின் கிளி மாதிரி தான் ஆளாளுக்கு புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் 1999ஆம் ஆண்டு முடிந்ததுமே உலகம் அழிந்துவிடும் என்று பலரும் டுமீல் விட்டுத் திரிந்தார்கள். நாஸ்ட்ரடாமஸ் கணித்திருக்கிறார், அவரின் கணிப்பு பொய்யானதில்லை என்று அடித்துப் பேசினார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் பாகுபாடின்றி நடுநடுங்கி செத்தது உலகம். உலகம் தான் அழியப் போகிறதே என்ற எண்ணத்தில் பல்வேறு சமூகக் குற்றங்கள் நடந்தது. நம்மூர் கிராமப்புறங்களில் கூட இந்த பீதியைப் பயன்படுத்தி தென்னந்தோப்புகளிலும், கம்மாய்க்கரைகளிலும் பல பாலியல் குற்றங்கள் நடந்ததாக பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம். 1999 முடிந்து சரியாக பத்து வருடங்கள் கடந்துவிட்டது. நாமெல்லாம் செத்தா போய் விட்டோம்?

உலகம் தோன்றியதிலிருந்தே உலகின் கடைசிநாளான ஜட்ஜ்மெண்ட் டே பற்றி பேசிக்கொண்டே தானிருக்கிறார்கள். உண்மையில் இன்று நம் பூமிக்கு அச்சுறுத்தலாக இருப்பது புவி வெப்பமடைதல் (குளோபல் வார்மிங்). மனிதர்களுக்கு மூளை வீங்கிப்போய் அறிவியலில் அக்குவேறு, ஆணிவேறாக அலசி, எக்குத்தப்பாக கண்டுபிடித்து தொலைத்த கண்டுபிடிப்புகள், நவீன வசதிகள் தான் (குறிப்பாக வாயுமண்டலம் மாசடைவதற்கு காரணமான தொழிற்சாலைகள், ஏசி இயந்திரங்கள்) மனிதகுலத்துக்கு வினையாக தோன்றியிருக்கிறது.


நாம் எப்போது அழிவோம், எப்படி அழிவோம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அழியவேண்டிய நேரத்தில் நிச்சயமாக அழிவோம். அது நிச்சயமாக இப்போது அல்ல. ஆகையால் இப்போதைக்கு உலகம் அழிவதைப் பற்றிய பழைய கணிப்புகளை வாசிக்காமல், ப்ரீயாக விடுவதே நம் மனநிம்மதிக்கு உத்தரவாதம் தரும் செயலாக இருக்க முடியும்.


(செய்தி உதவி குமுதம் ரிப்போர்டர்)

அழிவை நோக்கி நெய்தல்...



கடலும் கடல் சேர்ந்த இடமும் தான் நெய்தல் நிலம். ஆனால் இப்போது துன்பமும் துன்பம் சார்ந்த இடமுமாக மாறிவிட்டது. இன்று மத்தியில் ஆளும் மன்மோகன்சிங் தலைமையிலான மத்தியரசு மீனவர்களை அழித்தொழிக்க முடிவு செய்து விட்டது, ''மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம்'' என்ற பெயரில் புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது இந்த சட்டதின் மூலம் ஆளும் மன்மோகன்சிங்&சோனியா இருவரின் நிஜ முகம் வெளியில் வந்துள்ளது. இவர்கள் உண்மையிலேயே இந்திய மக்கள் மீது பற்று உள்ளவர்களா இல்லை பணத்தின் மீது ஆசை உள்ளவர்களா என்று இந்திய மீனவர்களை யோசிக்க வைத்து விட்டர்கள்,

இந்த சட்டத்தின் சாரம் இதுதான்...

1.மீன்பிடி படகுகளுக்கான லைசென்ஸ் வழங்குவது மற்றும் புதுப்பிப்பது போன்ற அதிகாரங்கள் மாநில அரசிடமிருந்து மத்தியரசுக்கு மாற்றப்பட்ள்ளது.
இனிமேல் கட்டுமரத்தில் மீன் பிடிப்பவன் கூட லைசென்ஸ் வாங்க டெல்லிக்கு செல்லவேண்டும்.
2.கடலில் எந்த இடத்தில் எவ்வளவு நேரத்துக்கு மீன் பிடிக்கவிருக்கிறோம், பயன்படுத்தும் வலை, பிடிக்கப்போகும் மீனின் வகை என் அனைத்தையும் முன்னதாகவே குறிப்பிட வேண்டும்.
3.இந்த விதிமுறைகள் அனைத்தயும் கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகாரம் கடலோரகாவல் படைக்கு வழங்கப்பட்டிருக்கிறது,கடலோரகாவல் படை மீனவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது நல்லெண்ண அடிப்படையில் எடுத்ததாகவே கருதப்படும்,அதற்க்காக அவர்கள் தவறான நடவடிக்கை எடுத்தாலும் கடலோரகாவல் படைமீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.
4.கட்டுமரம்,விசைப்படகு எதுவாக இருந்தாலும் கடல் எல்லையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை தாண்டி மீன்பிடித்தால் 9 லட்சம் அபராதமும் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.


முதலில் மீன்பிடி படகுகளுக்கான லைசென்ஸ் வழங்குவது மற்றும் புதுப்பிப்பது போன்ற அதிகாரங்களை மாநில அரசிடமிருந்து மத்தியரசுக்கு மாற்றும் உரிமை இவர்களுக்கு யார் அளித்தது, இல்லை மாநில அரசுகளிடம் தெரிவித்து இதுபற்றி அந்தந்த மாநில மீனவர்களிடம் கருத்து கேட்டார்களா? அப்படி எதுவும் நடக்கவில்லையே,இப்படி தான்தோன்றித்தனமாக மத்தியரசு முடிவெடுக்கும்போது மாநில அரசு ஏன் மத்திய அரசை கண்டித்து குரல்கொடுக்கவில்லை இல்லை கிடைப்பதில் ஆளுக்கு பாதி என்று கமுக்கமாக இருக்கிறார்களா.

அடுத்து கடலில் எந்த இடத்தில் எவ்வளவு நேரத்துக்கு மீன் பிடிக்கவிருக்கிறோம், பயன்படுத்தும் வலை, பிடிக்கப்போகும் மீனின் வகை என் அனைத்தையும் முன்னதாகவே குறிப்பிட வேண்டும். என்கிறார்கள் சரி இதை அப்படியே எடுத்துக்கொண்டாலும்.. இந்த இடத்தில் இவ்வளவு நேரத்துக்கு மீன் பிடிக்கவிருக்கிறோம், பயன்படுத்தும் வலை இது இந்த இன மீனைத்தான் குறிப்பிட்ட இடத்தில் பிடிக்கிறோம் என்று எப்படி சொல்லமுடியும்,
இதை எல்லாம் கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகாரம் கடலோரகாவல் படைக்கு வழங்கப்பட்டிருக்கிதாம் கடலோரகாவல் படை மீனவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது நல்லெண்ண அடிப்படையில் எடுத்ததாகவே கருதப்படுமாம்,அதற்க்காக அவர்கள் தவறான நடவடிக்கை எடுத்தாலும் கடலோரகாவல் படைமீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாதாம்.
என்னய்யா இது மீனவன் என்பவன் கொத்தடிமயா..?
கடலோரகாவல் படையினரால் தீவிரவாதிகள் ஊடுருவுவதையே தடுக்க முடியவில்லை இந்த லட்சணத்தில் கடலோரகாவல் படைக்கு இது கூடுதல் பணி.
கடலோரகாவல் படை தவறான நடவடிக்கை எடுத்தாலும் கடலோரகாவல் படைமீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாதாம்.அப்ப மீனவன் என்பவன் இழிச்சவாயனா இது எந்த ஊரு நியாயம் கடலோரகாவல் படையினர் என்ன கடவுள்களா.என்னய்யா கொடுமையிது...
அடுத்து கட்டுமரம்,விசைப்படகு எதுவாக இருந்தாலும் கடல் எல்லையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை தாண்டி மீன்பிடித்தால் 9 லட்சம் அபராதமும் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமாம்

நாளைக்கு இவர்களுடைய வாரிசுகள் கடைகளில் திங்க சென்றால்,எங்கு நீ திங்கப்போகிறாய் நீ என்னென்ன திங்கப்போகிறாய் என அனைத்தையும் சொல்லிவிட்டு போ. அங்கு போய் நீ இடம் மாறியொ இல்லை சொன்னதை மாற்றியொ தின்றாயானால் 9 லட்சம் அபராதமும் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.என்று சொல்வார்களா.?

மீனவர்கள் சம்பந்தமாக சட்டம் இயற்றுபவர்கள் மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தொ இல்லை ஓட்டெடுப்பு நடத்தியொ மீனவர்களின் நலன்களுக்கு கேடு இல்லாமல் சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும் அதை விட்டுவிட்டு தான்தோன்றித்தனமாக இவர்களாகாவெ முடிவு எடுக்க மீனவர்கள் என்ன இவர்கள் வீட்டு நாயா...? போட்டதை தின்று செரித்துவிட்டு போக.
அவர்களும் இந்தியர்கள்தான் இந்தியாவின் நலனில் அக்கரையுள்ளவர்கள் நாம் அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் அதை மறந்துவிட்டு அவர்களை குற்றவாளிகளைப் போலவும் தீவிரவாதிகளைப் போலவும் பார்க்கக்கூடாது அந்த கண்ணோட்டத்தில் சட்டங்களை வரையறுத்தல் கூடாது.
100 நாள் வேலைத்திட்டம் கொண்டு வந்த அறிவுஜீவிகளுக்கு இதுகூடவா தெரியவில்லை.
மொத்தத்தில் இந்ததிட்டம் மூலம் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு இந்தியக் கடல்வாசல்களை திறக்கிறார்கள், (இதன் மூலம் தீவிரவாதிகளுக்கும் வாசல் கதவை திறந்துவைக்கிறொம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.)அவர்கள் நம் கடலில் மீன் பிடித்து நமக்கே விற்ப்பனை செய்வார்கள், கூடவெ லஞ்சமும் தருவார்கள் அந்தக் காசுக்காகத்தானே இத்தனை கூத்தும் . இதை கேட்டால் எல்லோருக்கும் வேலை கொடுப்போம் என்பார்கள், மீனவ இனம் தோன்றிய காலம் முதல் சுயமாக வேலை செய்பவர்கள் மீனவர்கள் அவர்களை வெளிநாட்டு மீன்பிடி நிறுவனங்களிடம் அடிமைகளாகச் வேலைக்கு சேர்த்து விடுவதை வேலைவாய்ப்பு என்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த சட்டம் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்கிற நிலைதான் ஒரு பக்கம் இந்திய அரசின் சட்டம் மறுபக்கம் இலங்கை கடற்ப்படை மொத்ததில் மீனவன் என்பவன் இனி கொத்தடிமை...
இதையெல்லாம் மாற்ற வேண்டுமானால் மீனவர்கள் இந்தியா முழுவதும் அரசியல் ரீதியாக ஒன்று திரளவேன்டும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றியை தீர்மானிக்க கூடிய சக்தியாக மாறவேண்டும் அப்பொழுதுதான் அவர்களின் தார்மீக உரிமைகளை பெறமுடியும்.

தினசரி வேலைவாய்ப்பு செய்திகள்

தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் பற்றி அறிய இங்கு செல்க

MOBILE SECRET CODES

NOKIA

On the main screen type in:
*#06# for checking the IMEI.
*#7780# reset to factory settings.
*#67705646# This will clear the LCD display(operator logo).
*#0000# To view software version.
*#2820# Bluetooth device address.
*#746025625# Sim clock allowed status.
#pw+1234567890+1# Shows if sim have restrictions.
*#92702689# - takes you to a secret menu where you may find some of the information

*#3370# - Enhanced Full Rate Codec (EFR) activation. Increase signal strength, better signal reception. It also help if u want to use GPRS and the service is not responding or too slow. Phone battery will drain faster though.
*#3370* -deactivation. Phone will automatically restart. Increase battery life by 30% because phone receives less signal from network.


Wallet code for Nokia S60 phone, use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. Phone will ask you the lock code. Default lock code is: 12345
Press *#3925538# to delete the contents and code of wallet.
Unlock service provider: Insert sim, turn phone on and press vol up(arrow keys) for 3 seconds, should say pin code. Press C,then press * message should flash, press * again and 04*pin*pin*pin# \
*#7328748263373738# resets security code.
Default security code is 12345





CODE FUNCTION PERFORMED

* 3370# This Nokia code activates Enhanced Full Rate Codec (EFR) - Your Nokia cell phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%
#3370# Deactivate Enhanced Full Rate Codec (EFR)
* #4720# Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time
*#4720# With this Nokia code you can deactivate the Half Rate Codec
*#0000# Displays your phones software version, 1st Line : Software Version, 2nd Line : Software Release Date, 3rd Line : Compression Type
*#9999# Phones software version if *#0000# does not work
*#06# For checking the International Mobile Equipment Identity (IMEI Number)
#pw+1234567890+1# Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
#pw+1234567890+2# Network Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
#pw+1234567890+3# Country Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
#pw+1234567890+4# SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
*#147# This lets you know who called you last (Only vodofone)
*#1471# Last call (Only vodofone)
*#21# This phone code allows you to check the number that "All Calls" are diverted to
*#2640# Displays phone security code in use
*#30# Lets you see the private number
*#43# Allows you to check the "Call Waiting" status of your cell phone.
*#61# Allows you to check the number that "On No Reply" calls are diverted to
*#62# Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls are diverted to
*#67# Allows you to check the number that "On Busy Calls" are diverted to
*#67705646# Phone code that removes operator logo on 3310 & 3330
*#73# Reset phone timers and game scores
*#746025625# Displays the SIM Clock status, if your phone supports this power saving feature "SIM Clock Stop Allowed", it means you will get the best standby time possible
*#7760# Manufactures code
*#7780# Restore factory settings
*#8110# Software version for the nokia 8110
*#92702689# Displays - 1.Serial Number, 2.Date Made, 3.Purchase Date, 4.Date of last repair (0000 for no repairs), 5.Transfer User Data. To exit this mode you need to switch your phone off then on again
*#94870345123456789# Deactivate the PWM-Mem
**21*number# Turn on "All Calls" diverting to the phone number entered
**61*number# Turn on "No Reply" diverting to the phone number entered
**67*number# Turn on "On Busy" diverting to the phone number entered
12345 This is the default security code
press and hold # Lets you switch between lines


SAMSUNG

*2767*JAVA# Java Reset and (Deletes all Java Midlets)

*2767*MEDIA# Reset Media (Deletes All Sounds and Pics)

*2767*WAP# Wap Reset

*2767*CUST# Reset Custom EEPR0M

*2767*FULL# Reset Full EEPR0M (Caution)

For example : *2767*JAVA# would be keyed in as *2767*5282#

Note : Not all codes will work with SGH-C100.


Other Samsung Codes


*#06# IMEI code

*#9998*4357# Help Menu

*#9998*5282# Java menu (GRPS/CSD settings for JAVA server)

*#9999#0# Monitor Mode

*#9999# or *#9998*9999# Software Version

*#8888# or *#9998*8888# Hardware Version

*#9998*746# or *#9998*0746# or *#0746# Sim Infos

*#9998*523# or *#9998*0523# or *#0523# Display Contrast

*#9998*842# or *#9998*0842# or *#0842# Vibration On (until you push OK)

*#9998*289# or *#9998*0289# or *#0289# Buzzer On (until you push OK)

*#9998*288# or *#9998*0288# or *#0288# Battery & Field Infos

*#9998*377# or *#9998*0377# Error log

*#9998*778# or *#9998*0778# or *#0778# Sim Service table

*#9998*782# show date and alarm clock

*#8999*638# show network information

*#9998*5646# change operator logo at startup

*#9998*76# production number

*#9998*968# view melody for alarm

*#9998*585# Non-Volatile Memory (NVM)

*#3243948# Digital Audio Interference Off

*#32436837# Digital Audio Interference On

SAMSUNG T100 CODES

*#06# -> Show IMEI
*#9999# -> Show Software Version
*#0001# -> Show Serial Parameters

*2767*3855# -> Full EEPROM Reset ( THIS CODE REMOVES SP-LOCK!!!! but
also
change IMEI to 447967-89-400044-0, you must use CHGIMEI to
restore it)
*2767*2878# -> Custom EEEPROM Reset

*#8999*228# -> Battery status (capacity, voltage, temperature)
*#8999*246# -> Program status
*#8999*289# -> Change Alarm Buzzer Frequency
*#8999*324# -> Debug screens
*#8999*364# -> Watchdog
*#8999*377# -> EEPROM Error Stack
*#8999*427# -> Trace Watchdog
*#8999*523# -> Change LCD contrast
*#8999*544# -> Jig detect
*#8999*636# -> Memory status
*#8999*746# -> SIM File Size
*#8999*778# -> SIM Service Table
*#8999*785# -> RTK (Run Time Kernel) errors
*#8999*786# -> Run, Last UP, Last DOWN
*#8999*837# -> Software Version
*#8999*842# -> Test Vibrator
*#8999*862# -> Vocoder Reg
*#8999*872# -> Diag
*#8999*947# -> Reset On Fatal Error
*#8999*999# -> Last/Chk

*#8999*9266# -> Yann debug screen (=Debug Screens?)
*#8999*9999# -> Software version

*0001*s*f*t# -> Changes serial parameters (s=?, f=0,1, t=0,1)
(incomplete)
*0002*?# -> unknown
*0003*?# -> unknown


SAMSUNG V200 CODES

v200 Unlock Code-> *2767*7822573738#

*#9324# Netmon (press the hangup key to exit)
*#9998*JAVA# Edit GPRS/ CSD settings (S100 Only)
*#9998*Help# Help screen/ List of codes
*#9998*LOGO# Change operator Logo
*#9998*RTC# RTC Display
*#9998*Bat# Battery Status
*#9998*Buz# Turns Buzzer ON
*#9998*Vib# Turns Vibrator ON
*#9998*LCD# LCD Contrast
*#9998*9999# Softwre Version
*#9998*8888# Hardware Version
*#9998*377# NVM Error Log (?????)
*#9998*NET# SIM Network ID
*#9998*778# SIM Serv. Table
*#9998*SIM# SIM Info
*#9998*PN# Production No.
*#9998*968# Reminder Tune
*#9998*NVM# Displays Non-Volitile Memory Status
*#9999*C# ???????????????????
*#06# Displays phones I**I No.

*#9998*2576# Forces SIM Error
*#9998*DEAD# Forces Phone Crash
*2767*MEDIA# Resets the medis on the phone (deletes all downloaded
pics/tones)
*2767*FULL# Resets the EEPRON *DANGEROUS*
*2767*CUST# Resets the Custom EEPRON
*2767*JAVA# Resets JAV downloads (deletes all downloaded midlits)
*2767*STACKRESET# Resets Stack
*2767*225RESET# ????????????????? * Dangerous *
*2767*WAP# Resets WAP Setting & Deletes Favorites


SAMSUNG A800 CODES
The universal unlock code is *2767*637# do this with out your sim in.
litemint
.......................................................................
IMEISV = TAC + FAC + SNR + CD + SVN

IMEI = International Mobile station Equipment Identity
TAC = Type Approval Code
FAC = Final Assembly Code
SNR = Serial Number
CD = Check Digit
SVN = Software Version Number

தமிழர்


தமிழர்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயம் தென்னிந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும் தமிழீழமுமெ ஆகும். 1800 களில் பிரிட்டீஷ் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலெசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியஸ், மடாஸ்கர், தென்னாப்பிரிக்கா, போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20 ம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950 களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். 1983 இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டு பெருமளவு ஈழத்தமிழர்கள், ஆஸ்த்ரேலியா, கனடா, அமெரிக்கா, போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நார்வே, போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் சுமார் 77 மில்லியன் தமிழர்கள் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.